திருநந்தி தேவரும் மகிழ்ச்சி எய்தி ‘‘அலரிலுறை பிரமனே! நம்முடைய கச்சபேசப் பெருமானது திருமுன் எதிர்ப்படுதலால் அப்பொழுதே உன்னுடைய புதல்வன் பெற்ற சாபம் தீர்ந்தது. ஆனாலும், எமது இறைவன் அடியவரிடத்துப் பந்தித்த பெரிய கருணைக்குறைவிடமானவன் என்பதை நிலை நிறுத்தினன் நின்மகன் மணங்கமழும் சோலை சூழ்ந்த வடதிசையில் உள்ள மேரு மலையை அடைவானாக. அவ்விடத்தில் அவ்வடிவம் நீங்கும்.’’ நவைதீர்ந்தபின் எம்அரு ளால்இவன்நம் மாணாக்கனு மாகி நயந்துதவும், சிவதீக்கையை யுற்று விரிந்தகலைத் திரள்யாவும், உறீஇச்சிவ ஞானமுணர்ந், தவமாற்றுவன் என்றருள் செய்தகல அலரோன் அவண் மைந்தனை அன்புறுதன், இவர்வுற்ற கணத்தரொடும்புகுவித் திருப்பாலரு மாதவம் முற்றியபின். 37 குற்றம் நீங்கிய பின்பு எமது அருளைப் பெற்று இவன் நமது மாணாக்கனுமாய் நாம் விரும்பியருளும் சிவதீட்சையைப் பெற்றுப் பல வகைப்பட்டு விரிந்த நூற்றிரளை யெல்லாம் ஆராய்ந்து சிவஞான நூலோதிக் குற்றத்தினின்று நீங்குவனென்று திருவருள் செய்து நீங்கப் பிரமன் அவ்விடத்துத் தனது புத்திரனை அன்பு மிக்க தனது பரவிய கூட்டத் தொடும் மேருவிற் செல்ல விடுத்து அதன்பின் அரிய பெரிய தவத்தைச் செய்து முடித்த பின், உயர்கச்சியில் ஓங்கு பலாசடியின் உறைகச்சப ஈசன் அருட்கருணை, பயில்வுற்று முறைப்படி எவ்வுலகும் பண்டேயென நன்கு படைத்தனன்மற், றியல்பின்வட மேருவின் நந்திபிரான் இருக்குநிலை யத்தின் மலர்த்தலைவாழ், அயன்மைந்த னொடுஞ்செல் கணத்தவர்அப் பெருமானடி ஏத்தி இயம்புவரால். 38 நகரங்கள் எவற்றினும் உயர்ந்த காஞ்சியில் ஓங்கிய முருக்கடியில் எழுந்தருளியுள்ள கச்சபேசப் பெருமானுடைய திருவருளைப் பெறுதலால், முறையே எல்லா உலகங்களையும் முன்பு போல நன்றாகச் சிருட்டித்தனன். வட மேருவில் நந்தியம் பெருமான் திருக்கோயிலைச் சாரச் சென்ற பிரம கணத்தவர் அப்பெருமானடியைத் துதித்துக் கூறுவர். நந்தி தேவருக்குச் சனற்குமார முனிவர் மாணாக்கராதல் வேதாஎமை ஏயினன் நீயிர்கள்போய் மேருப்புடை நந்தி முதற்குரவன், பாதாம்புயம் ஏத்திஇம் மைந்தன்அவன் மாணாக்கனுமாம்படி சேர்த்திஇவண், போதீரென என்றருள் பெற்றவர்தாம் போகத்தன் அருட்கணின் ஒட்டகமாம், கோதார்உரு நீத்தொளி பெற்றவனை மாணாக்க னெனும்படி கொண்டனனே. 39 பிரமன் ‘‘மேருவின் கண் நீங்கள் போய் நந்தி தேவராகிய முதலாசிரியரது திருவடித் தாமரையை வணங்கி இம்மகனை அந்நந்தி தேவர் மாணாக்கனாகும்படி அடைவித்து இவ்விடத்து வருவீரென்று எம்மைக் |