வனப்பு-வகுப்பழகு; திரண்ட அழகு, அம்மையார் உடனிருப்பும், பேரழகும், இறைவன் திருக்குறிப்பும் நோக்கி முற்றுப் பெறாதெனப் புருடோத்தமன் கைவிட்டனன். ‘‘மாற்குமால், கொள்ளுந் திருவழகு கொண்டு’’ (கச்சி ஆ. 108, 109 கண்ணி) ஆடலைத் தொடங்குந் தொறுந்திரு மேனி அழகினைக் கண்களான் மடுத்து, வாடரு மயல்பூண் டவசராய்ச் சதியின் வழிப்பதம் பெயர்தரா நிலையை, நாடகத் தலைவர்க் கெதிர்அடியேங்கள் நடிப்பதற் கஞ்சுதும் என்னாச், சேடமை வனப்பின் உருப்பசி முதலோர் அவிநயச் செய்கையான் மறைப்ப. 8 பெருமை அமைந்த அழகினையுடைய ஊர்வசி முதலானோர் நடனந் தொடங்குந் தொறும் இறைவனுடைய திருமேனி அழகைக் கண்களால் நிரம்பப் பருகித் தளர்ச்சியற வளர்ச்சியுற மயலெய்தித் தம் வசமிழந்தமையால் தாளவொற்றின்வழிக் கால் பெயராத நிலையை ‘நாடகத்தைந்தொழில் நடத்தும் பிரான்’ திருமுன்னர் அடியேங்கள் நடிப்பதற்கு அஞ்சுகின்றே மென்று கூறும் மாற்றத்தால் ஏமாற்றவும். அவிநயம்-அங்கங்களால் தோற்றுவிக்கும் குறிப்பு; நடித்தல் என்ற பொருளில் வந்தது; (உண்மையை மறைத்தல்), மல்லலங் கமலத் திருவடி நோவ மறுவலும் மறுவலும் ஓடிக், கல்லொளி பரப்பு மணிமுடி அழுத்துங் கடவுளர் தொகையினை விலக்கு, நல்லமெய்ப் பணியை நான்பெற நல்கி அவரவர்க் கருள் செய்து போக்கி, எல்லைதீர் கருணை மலையின் ஓலக்கத் திருந்தனன் என்னை ஆளுடையான். 9 வளப்பமும் அழகும் அமைந்த தாமரை மலரனைய திருவடிகள் கன்றும்படி மீண்டும் மீண்டும் சென்று ஒளியைப் பரப்புகின்ற மணிகள் அழுத்திய முடி அழுத்துதற்குக் காரணராய தேவர்கள் குழாத்தினை விலக்குகின்ற நல்ல சிவப்பணியை அடியேன் பெறுமாறு அருள்செய்து அவரவர் தமக்குள்ள குறைகளை அருள் செய்து விடை கொடுத்து அளவு தவிர்ந்த கருணை மலைபோல என்னை அடிமையாக உடைய பெருமான் பேரவையில் எழுந்தருளி யிருந்தனன். நந்தி தேவர் சனற்குமாரர்க்குக் கூறுதலின் ‘நான்’ பெற என்றனர். திருநந்தி தேவர் சந்நிதி விலக்கல், அவர்தம் தோத்திரத்தினும் காண்க. அறுசீரடி யாசிரிய விருத்தம் இருந்தருள் காலை வெண்கேழ் இமம்பொதி அடுக்கல் ஈன்ற முருந்திள முறுவற் செவ்வாய் முகிழ்முலைக் கடவுட் கற்பின் திருந்திழை உலகம் ஈன்ற செல்விமுத் தேவுங் காணாப் பெருந்தகை அடிகள் போற்றி இதுஒன்று பேச லுற்றான். 10 | |