திருநெறிக்காரைக்காட்டுப்படலம் 147


     வேலெனப் பேசப்பெறும் விழியினையுடைய அம்மையைப் பாகத்திற்
பொருந்தினோன். மேலெனப் படும் உருத்திர பதங்களைக் கடந்த மேலோன்,
பெருமையன எவற்றையும் மாற்றுதலாற் பெருமையன் வேதியனுக்கு வேதம்
தந்த வேதியன்.

     மேலோன், மாலோன், வேதியன் என மும்மூர்த்திகளைக் கொண்டு
கூறியது. ‘யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்’ (திருவாசகம்). வேத
நாயகன் வேதியர் நாயகன்’ என்பன காண்க.

பங்கயன் றன்னைமுன் படைத்து மால்முதல்
புங்கவர் தம்மைப்பின் உதவும் பொற்பினான்
அங்கவன் இலனெனில் அகில லோகமும்
பொங்கிய வல்லிருள் பொதிந்த நீரவே.         25

     பிரமனை முதலில் படைத்துத் திருமால் முதலான தேவரைப்
பின்னர்ப் படைக்கும் பொலிவினால். அச் சிவபெருமான் இலனாயின் எல்லா
உலகங்களும் மிகுந்த வலியுடைய இருள் மூடிய இயல்பினவே.

     “படைப்போற் படைக்கும் பழையோன், காப்போற் காப்பவன், சகல
நிலை, சுத்தநிலை இல்லையாய்க் கேவல நிலையேயாய் ஆணவத்தோ
டத்துவிதமாய் இருளில் அழுந்திக் கிடத்தலின் ‘இருள் பொதிந்த நீர’
என்றனர்.

பகல்இர விலதுள தெனும்ப குப்பிலா
அகலரும் இருள்பொதி அநாதி காலையில்
உலகரும் பரசிவன் ஒருவனே உளன்
மிகுமுணர் வவனிடை வெளிப்பட் டோங்குமால்.   26

     முத்தநிலை பெத்தநிலை அன்றிச் சகல நிலை கேவலநிலை எனப்
பெறும் பாகுபாடில்லாத எஞ்ஞான்றும் அகலாத ஆணவ இருள்
ஆன்மாக்களை மூடியிருந்த காலங்கடந்த நிலையில் அழிவில்லாத பரமசிவன்
ஒருவனே அவ்விருளில் தோயாதவனாக நீங்கி நின்றனன். பேரறிவு
அவனிடத்து வெளிப்படுதலான் வியாபகனாவன் அவன்.

     அநாதி கேவலநிலை இதனாற் கூறப்பட்டது. “காரிட்ட ஆணவக்
கருவறையில் அறிவற்ற, கண்ணிலாக் குழவியே போல், கட்டுண்டிருந்த
எமை” (தாயுமானவர்).

எங்குள யாவையும் இவன்வ யத்தவாம்
எங்கணும் இவன்ஒரு வயத்தின் எய்திடான்
எங்கணும் விழிமுகம் எங்கும் கால்கரம்
எங்கணுந் திருஉரு இவனுக் கென்பவே.         27

     இவன் ஒருவனே பசுபதியாகலின் எப் புவனத்துள்ளனவும்
விஞ்ஞானாகலர், பிரளயாகலர், சகலர் ஆதற்குரிய யாவும் இவன் வழி
நிற்பன ஆகும், உலகங்கள் அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகலின்