|      மேற்குப்பக்கத்தில் சத்திய விரத தீர்த்தம் ஒன்று மிகவும் மேன்மை    பெற்றுடையது. நூல்களெல்லாம் பெரிதும் போற்றும் சைவ விரதம்
 மேற்கொண்டு அவ்விடத்துச் சென்று ஊற்று எழும் தட நீராடி.
      பசுபதி விரதம்-சிவசங்கற்பம், உதகம்-நீர்,			 		| விதியுளி முடித்துநித் தியநை மித்திகம் புதியநீ றுடலெலாம் பொதிந்து புண்டரம்
 மதிநுதல் விளங்கிட அக்க மாமணி
 நிதியெனப் பூண்டுநல் லொழுக்கம் நீடியே.       35
 |       நூன்முறை தெரிந்த சீலத்தில் நாட்கடனும், விசேட நிகழ்ச்சியும்     ஒருங்குற முடித்துப் புதிய திருநீற்றை உடம்பு முழுதும் பூசி (முழுநீறு பூசி)
 மதிக்கத்தக்க நுதல் விளக்கம் பெறத் திரிபுண்டரமாகத் தீட்டி
 உருத்திராக்கவடம் பெருஞ்செல்வமாக மதித்தணிந்து நல்லொழுக்கத்தில் தங்கி,
 		| தெள்ளொளிப் பளிங்கெனச் சிறந்த செவ்விசால் வெள்ளொளிச் சத்திய விரத நாதனை
 உள்ளகக் கமலத்தின் வழிபட் டுண்மையான்
 நள்ளலர்க் கடந்தவ முத்தி நண்ணுவாய்.        36
 |       பகைவரைக்கடந்த இந்திரனே, தெளிந்த ஒளியினையுடையபளிங்கு    போலச் சிறந்த பொலிவமைந்த வெள்ளிய ஒளியினையுடைய சத்திய விரத
 நாதனை உள்ளத் தாமரையில் உண்மையோடு வழிபாடு செய்து முத்திப்
 பேற்றினை அடைவாய்.
      புறப்பகையையும், அகப்பகையையும், வென்றவன் ஆகலின், ‘நள்ளலர்க்     கடந்தவ’ என விளிக்கப்பட்டனன்.
 		| என்றலும் இந்திரன் இறைஞ்சி என்கொலோ வென்றிகொள் சத்திய விரதங் கேள்வியால்
 தொன்றுள தொடர்புபோல் சுழலும் என்மனம்
 சென்றுபற் றியதெனக் குரவன் செப்புவான்.     	37
 |       என்று கூறியபோது இந்திரன் வணங்கிப், பொறிவழிச் சென்று    கொட்புறும் என்மனம் வென்றி கொண்ட சத்திய விரதத்தைக் கேட்ட
 மாத்திரையால் முன்பு பயிற்சி பெற்றாற்போலச் சென்று பற்றியதற்குக்
 காரணம் யாதோ’ என வினவ வியாழப் புத்தேள் விடை கூறுவார்.
 		| உள்ளது கூறினை உம்மை ஆயிடை அள்ளிலைக் குலிசிநீ அணைந்து புந்திநாள்
 வெள்ளநீர்ச் சத்திய விரதம் மூழ்கிஈண்
 டெள்ளரும் விண்ணகர்க் கிறைமை எய்தினாய்.   38
 |       கூரிய இலை வடிவமைந்த வச்சிராயுதத்தை உடையை ஆகிய நீ     உள்ளது கூறினாய் முற்பிறப்பில் அவ்விடத்தை அணுகிப் புதன்கிழமையில்
 சத்திய விரத தீர்த்தத்தில் மூழ்கி இப்பொழுது இகழ்ச்சியில்லாத
 விண்ணுலகிற்குத் தலைவன் ஆயினை,
 |