16காஞ்சிப் புராணம்


தொண்டைநாட்டரணை எறிந்து குறுநில மன்னரை ஏவல் கொண்டு,
செங்கோல் செலுத்துக என ஏ?வ மலையினின்று விரைய இழிந்துபோய்,

     குறை-ஒலிக்கின்ற, புரைதப என்னும் குறிப்பு வெப்பமாகிய
கொடுங்கோன்மையையும் பாலி அரசனின் செங்கோன்மையையும் விளக்கியது.

அரசுகள் சூழ்ந்து செல்ல அருங்கணி மலர்வாய் விள்ளச்
சரிகுழற் குறமின் னார்கள் பற்பல தானை வெள்ளம்
விரவிடப் பரிய காலாள் மேதகு மாக்கள் அத்தி
இருபுடை தழுவிப் போத இகல்கொடு வையம் ஊர்ந்து.   19

     பாலிநதியை அரசாக உருவகிக்கும் பதின்மூன்று பாடல்கள்
படித்தின்புறற் குரியன.

     அரசமரங்கள் திரண்டு போதவும், அரிய வேங்கை மரங்கள் மலரவும்,
குறமகளிர் தம் ஆடைகள் பல கலப்பவும், பரிய அடியினையுடைய ஆண்
மரங்கள், மாமரங்கள், அத்தி மரங்கள் இருபுறமும் தழுவிப் போகவும்
வன்மையொடும் புவியில் தவழ்ந்து.

     (வேறு பொருள்) அரசர் சூழவும், சோதிடர் நல்லோரை கூறவும்,
குறமகளிர் தந்த கள்ளைப் போர்வீரர் கொண்டு விரவவும், பதாதிகள்,
குதிரைகள், யானைகள் இருமருங்கும் போதவும், பகையை உட்கொண்டு
தேரூர்ந்து.

அணிவகுத் தெழுந்து குன்றர் அரும்பெறற் குறிச்சி புக்கு
மணிவகை ஆரம் பூண்டு மதுக்குட விருந்து மாந்தித்
தணிவற வெளிக்கொண் டேகித் தலைத்தலை வேட்டம்போகித்
துணிபட மாக்க ளெல்லாந் தொலைத்துடன் ஈர்த்துச் சென்று.   20

     ஈர்த்துச் செல்லும் பொருள்களை வரிசையாக்கிக் கிளர்ந்து மலைவாழ்நர்
சிற்றூர்களிற் புகுந்து நவமணி மாலைகளும் தாங்கி, மதுக் குடங்களை
அகப்படுத்துக் குறைவறக் கொண்டு வெளிப்பட்டு அவ்வவ் விடந்தொறும்
கொள்ளை கொண்டு விலங்குகள் குறைபடத் தொலைத்து ஈர்த்துச் சென்று,
தார். கூழை, (முன்படை, பின் படை) பல்வகை வியூகங்களாக அணிவகுத்து
(ஈர்த்துக் கொணர்ந்த பொருள்களை வரிசையாக்கி) எனவும் பிற இரண்டற்கும்
பொதுவாக்குக.

கலிவிருத்தம்

மண்டமர் மேல்கொடு வந்தனம் இன்னே
தண்டக நாட்டுறை தாபதர் நோயோர்
பெண்டிரும் நும்அரண் ஏகுதிர் பெட்டென்
றெண்டிசை யார்ப்ப இசைப்பறை சாற்றி.    21