|      அன்றலர்ந்த தாமரை மலரையும், பாதிரி, நறிய புன்னை, அடி உயர்ந்த    சண்பகம், மல்லிகை, தண்ணிய கழுநீர், முல்லை இவற்றின் மலர்களையும்,
 வில்வத்தையும் என்றும் பறித்துக் கொடுத்து மன்மதனைப் பயந்த திருமாலின்
 உள்ளத்தை மகிழச் செய்திடும் அந்நாட்களில்,
      யானை முனிவரர்க்குத் தொண்டு செய்தலை இலக்கியத்துட்காண்க.	     கசேந்திரனை முதலை பற்றல்	 		| ஓர்பகல் நீர்நிறை பூந்தடம் ஒன் றுறு பூக்கொய்வான் சீர்தகு திண்கரி சேறலும் அங்கொரு வன்மீனம்
 நீரிடை நின்று வெகுண்டடி பற்றி நிமிர்ந்தீர்ப்பக்
 காரொலி காட்டி அகன் கரை ஈர்த்தது காய்வேழம்.    	11
 |       ஓர் நாள் நீர் நிறைந்த பூக்களையுடைய குளத்தில் முளைத்த    மலர்களைக் கொய்யும் பொருட்டுச் சிறப்பமைந்த திண்ணிய யானை சென்ற
 அளவிலே அத்தடத்தில் ஒரு முதலை நீரில் இருந்து சினங்கொண்டு
 அடியைப் பற்றிச் செருக்கொடு நீரிடை இழுப்ப, இடியொலி எழுப்பி அகன்ற
 கரையை நோக்கி இழுத்தது சினங்கொண்ட யானை.
 		| இவ்வகை தண்புன லிற்கரை மீதிவை ஓவாமே தெவ்வுடன் ஈர்ப்புழி யாண்டுகள் எண்ணில சென்றேகக்
 கைவரை ஆற்றரி தாய்அல றிக்கரு மாமேகத்
 தவ்வடி வோனை அழைத்தது மூல மெனக்கூவி.      12
 |       இவ்வகையாக முதலையும் யானையும் முறையே குளிர்ந்த நீரிலும்,     கரைமீதும் செல்ல ஒழியாது, பகைமை உணர்ச்சியுடன் இழுக்கும் காலை
 வருடங்கள் எண்ணில சென்றொழிய யானை வலிபொறாது வெருவி மிகக்
 கரியமேக வடிவினனாகிய திருமாலை ‘மூலமே’ எனக் கூவி அழைத்தது.
     திருமால் கசேந்திரனைக் காத்தல்	 		| அண்ட ரெலாம்யாம் மூலம் அலேமென் றகல்போழ்தில் புண்டரி கக்கட் புண்ணியன் நன்புள் ளரசின்மேல்
 கொண்டெதி ரெய்திக் கரிஅர செய்துங் கொடுவெந்நோய்
 கண்டுளம் நெக்கான் அஞ்சலை அஞ்சேல் களிறென்னா.  	13
 |       தேவர் யாவரும் ‘யாம் மூலம், அல்லேம்’ ஆகலின் நம்மை     அழைத்திலதென்று அகல்கின்ற பொழுதில் தாமரை மலரையனைய
 கண்ணுடைப் புண்ணிய மூர்த்தியாகிய திருமால் நல்ல கருடவாகனத்துத்
 தோன்றி எதிர் சென்று கசேந்திரனது கொடுந்துன்பம் கண்டு உளம்
 நெகிழ்ந்து கசேந்திரனே அஞ்சாதே! அஞ்சாதே! என்று கூறி,
      புண்ணியனை நண்ணிய புண்ணியனைப் புண்ணியன் என்றனர்.	 		| ஆழி யெறிந்தான் அதன்உயிர் உண்டான் கரியோடும் வாழிய காஞ்சி மாநகர் எய்திச் சிவபூசை
 வேழம் அளிக்கும் மேதகு பள்ளித் தாமத்தால்
 ஊழ்முறை ஆற்றித் தவம்நனி செய்தங் குறைகாலை.    14
 |  |