|      திருமால் தன்னையும் வெல்லும் வரத்தைப் பெருமான் தருதல்    வாணேசப் படலம் 74ஆம் செய்யுளிற் காண்க.
 		| எனஅங் கருள்செய் தலும்இந் திரைகோன் மனம்ஒன் றவணங் கிவணங் கியெழுந்
 துனதம் புயபா தயுகத் தடியேற்
 கனகம் பெறுபத் தியளித் தருளாய்.            26
 |       என அவ்விடத் தருள்செய்த அளவிலே இலக்குமி நாயகன் மனம்    பொருந்தப் பலகாலும் வணங்கி எழுந்து உனது தாமரை மலரனைய
 அடியிணைகளில் அடியேனுக்குத் தூய பேரன்பினை அளித்து அருள்
 செய்யாய்.
      இந்திரை-இலக்குமி. யுகம்-இரண்டு. அனகம்-தூய்மை.	 		| வரதா மரையோ னொடுமற் றுலகும் வரதா தரல்வேட் டமனத் தினன்யான்
 வரதா வரம்ஈ துவழங் குதிநீ
 வரதா எனஓ திவழுத் தினனால்.              27
 |       வரதனே, மேன்மை பொருந்திய பிரமனோடு உலகங்களையும்     படைத்தலை விரும்பிய மனத்தையுடையேன் அடியேன். வரதனே! வரமாக
 இதனை வழங்குவாய் நீ. வரதா எனக் கூறித் துதித்தனன்.
 		| நின்னா சைநிரம் பவரங் களெலாம் இன்னே கொளநல் கினம்ஏ ரிழைமா
 மன்னா பலகால் வரதா எனநீ
 சொன்னாய் எமைஅன் புதுளும் புறவே.         28
 |       அழகிய அணி பூண்ட இலக்குமி நாயகனே! நின் விருப்பம் முற்றுப்    பெற வரங்கள் யாவும் இப்பொழுதே கொள்ளும் வகை அளித்தோம். வரதா
 எனப் பலமுறை எம்மை அன்பு ததும்ப அழைத்தனை. ஆகலின்
 		| வாசத் துளவோய் இனிநீ வரத ராசப் பெயராற் பொலிவாய் எமதாள்
 பூசித் தனைபுண் டரிகங் களினால்
 பேசிற் பதுமாக் கனெனப் பெறுவாய்.          	29
 |       நறுமணங்கமழும் துழாய் மாலையோனே! இனி நீ வரதராசன் என்ற    பெயரொடும் விளங்குக! தாமரை மலர்களைக் கொண்டெம்முடைய
 திருவடிகளைப் பூசித்தமையால் சொல்லுமிடத்துப் பதுமாக்கன் (பதுமாட்சன்)
 எனப் பெயர் பெறுவாயாக.
 அறுசீரடி யாசிரிய விருத்தம்	 		| என்றருள் புரிந்த வள்ளல் இணையடி வணங்கி மாயோன் வென்றிவெள் விடையாய் இன்னும் விண்ணப்பம் ஒன்று கேட்டி
 நின்றிருப் பாதபூசை நித்தலும் அடியேன் ஆற்ற
 நன்றும் இவ் வத்தி ஏவற் பணிநயந் தொழுகிற் றன்றே,   	30
 |  |