| வலம்புரி விநாயகப் படலம்	 கலி விருத்தம்	 		| நலம்புரி புண்ணிய கோடி நாதர்தம் புலம்புரி பெருமையைப் புகன்று ளேம்இனி
 நிலம்புரி தவத்தினீர் அத்தி நீள்வரை
 வலம்புரி விநாயகன் மாட்சி செப்புவாம்.         1
 |       நிலத்தவர் செய்த தவப்பயனாக விளங்குவீர், நலத்தைத் தருகின்ற    புண்ணிய கோடீசர் தமது மெய்யுணர்வைத் தருகின்ற பெருமையைக்
 கூறினோம். இனி அத்திகிரியில் வலம்புரி விநாயகருடைய மாட்சியைக்
 கூறுவாம்.
 		| முன்னைநாள் அயன்அரி முனிவர் வானவர் கின்னரர் ஓரிடைக் கெழுமித் தங்களுள்
 பன்னுத லுற்றனர் படிறர் செய்வினை
 அந்நிலை ஊறின்றி அழகின் முற்றுமால்.        2
 |       முன்னோர் காலத்தில் திருமால், பிரமன், முனிவர், விண்ணோர்,    முதலானோர் யாவரும் ஓரிடத்துக் குழுமித் தங்களுள் பேசத் தொடங்கினர்.
 ‘வஞ்சகராகிய அசுரர் செய்கின்ற சூழ்ச்சிகள் அப்பொழுதே இடையூறின்றிச்
 செவ்விதின் முற்றுப் பெறுமாகலின்,
 		| அங்கவர் தமக்கிடை யூற்றை ஆக்கவும் நங்களுக் கூறுதீர்த் தினிது நல்கவும்
 இங்கொரு கடவுளைப் பெறுதற் கெம்பிரான்
 பங்கயத் திருவடி பழிச்சி வேண்டுவாம்.          3
 |       அந்நிலையே அவர்தம் வஞ்சகச் செயல்களுக்குத் தடையுண்டாக்கவும்,     நஞ்செயல்களுக்குத் தோன்றும் தடைகளை நீக்கி இனிது முற்றுப்
 பெறுவிக்கவும் இந்நிலையில்: ஓர் கடவுளை எய்துதற்கு எமது பெருமானுடைய
 தாமரை மலரனைய திருவடிகளைத் துதித்து வேண்டுதலைச் செய்வோம்.
     இமையவர் இறைவனை வேண்டல்	 		| என்றுளந் துணிந்தனர் எய்தி மந்தரக் குன்றமீ தெம்பிரான் கோயி லுள்ளுறாச்
 சென்றனர் தொழுதனர் செவ்வி நோக்கிமுன்
 நின்றனர் மறைகளால் துதிநி கழ்த்தினார்.        4
 |       என்றுள்ளத்து முடிவு செய்தனர். மந்தர மலையை அடைந்து, திருக்கோயிலினுட்புக்கு எம்முடைய பெருமான் திருமுன்புசென்று நின்று தொழுது தங்குறை இரத்தற்குரிய காலத்தை நோக்கி முன் நின்று வேத தோத்திரங்களைச் செய்தனர்.	 |