வலம்புரி விநாயகப் படலம் 169


     மகிழ்ச்சியொடும் பன்முறை ஊன்றிப்பார்த்து இவற்றின் இயல்புகள்
யாவை அவற்றைக் கூறுதி என்னச் சிவபிரானார் உமாதேவியைத் தழீஇக்
கொண்டு கூறுவார்: செல்வீ! மனம் ஒன்றிக்கேள், கேடில்லாத இப்பிரணவ
மந்திரம் நமக்குரியது. அது மூவரைத் தோற்றுவித்ததாகும். சொல்லுங்கால்,
அது நினக்குரியதாகும். அவ்வுப மனு முச்சத்தியைத் தோற்றுவிக்கும்
முதற்பொருள் ஆகும்.

     மூவர்: பிரமன், மால், உருத்திரர், முச்சத்திகள்: வாணி, திரு, உமை.

மும்முறை முதல்எலாம் ஈன்றிடும் இருமுது குரவ ரான
இம்மனுக் கரியொடும் பிடியெனத் தோன்றலின் இவைக ளாகி
அம்மநாம் புணர்தும்என் றவ்வுருக் கொண்டனர் ஆடு காலைச்
சும்மைநீர் உலகெலாம் உய்யவந் துதித்தனன் தோன்றல் அன்றே

     மூன்று வேதங்கள் முதலான எவற்றையும் தோற்றுவிக்கும் தந்தை
தாயரான இம்மந்திரங்கள் ஆண் யானையின் வடிவும் பெண்யானையின்
வடிவுமாகக் காட்சிப் படுதலின் இவற்றின் வடிவு கொண்டு, நாம் கூடுவேம்
என்றருளி அவ்வடிவு கொண்டு பொருந்துங் காலை ஒலிக்கின்ற நீர் சூழ்ந்த
உலகெலாம் உய்யுமாறு தோன்றல் அப்பொழுதே வந்து தோன்றினன்.

கயமுகப் பிள்ளையை இருவருங் காதலான் எடுத்த ணைத்து
வயமுற மடித்தலத் திருத்திமெய்க் கலன்பல அணிந்து வாழ்த்த
இயல்புடைப் புதல்வனும் உவகையான் எழுந்தெதிர் நடித்தல்
                                             செய்தான்
நயனம்மாக் களிகொள நோக்கினாள் உலகெலாம் ஈன்ற நங்கை.  10

     யானைமுகமுடைய அப்பிள்ளையைப் பிரானும், பிராட்டியும்
விருப்பொடும் கையில் எடுத்து மார்போடணைத்து மடியில் இருத்தித்
திருமேனியில் பல அணிகளையும் சாத்தி வெற்றியுண்டாகென வாழ்த்த
இயல்பின் வரும் மூத்த பிள்ளையாரும் மகிழ்ச்சியொடும் எழுந்து திரு
முன்பில் திருக்கூத்தியற்றினார். எல்லா உலகங்களையும் ஈன்று அவற்றின்
ஆடல் காணும் அம்மையார் தம் கண்கள் பெருங் களி கொள்ள
நோக்கியிருந்தனர்.

     எல்லா நலங்களும் இயல்பின் வந்த புதல்வன் என்பார் இயல்புடைப்
புதல்வன் என்றனர்.

அங்கையான் ஒத்திநின் றாடல்கண் டகங்களி துளும்பி ஐயன்
பங்கயப் பதந்தொழு திறைவநீ பயந்தசேய் இவனை யின்னே
எங்குள கணங்களும் பல்கண நாதரும் எவரும் ஏத்தத்
துங்கமாம் இறைமைஈந் தருளென வேண்டலுஞ் சூல பாணி.  11

     சப்பாணி கொட்டி நின் றாடலைக் கண்டு உள்ளத்துள் மகிழ்ச்சித்
ததும்பி, முதல்வனுடைய மலரனைய திருவடிகளைத் தொழுது‘ இறைவனே
நீ பயந்த இம்மகனை இப்பொழுதே பதினெண் கணங்களும்,