170காஞ்சிப் புராணம்


சிவகணத்தலைவர் பலரும், யாவரும் துதிக்க உயர்ச்சி வாய்ந்த தலைமை
தந்தருளாய்’ என்று வேண்டும் அளவிலே சிவபெருமான்,

     அகங்கை-உள்ளங்கை. தாள அறுதியில்நின்று என்க. பாணி-கை.

கடவுளர் முனிவரர் அயனரி பலகண நாத ரெல்லாம்
உடன்வரத் திருவுளஞ் செய்தழைத் தோதுவான் மடித்த லத்தின்
மிடலுடைச் சிறுவனை இருத்திமற் றிங்கிவன் வெற்பின் வந்த
மடமயிற் கினியவன் யாம்பெறு மூத்தமா மைந்தன் ஓர்மின்.    12

     திருமாலும், பிரமனும், பலகண நாதரும், முனிவரரும், தேவரும்,
பிறரும் உடனே வரவேண்டு மென்று திருவுள்ளத் தெண்ணிய அளவிலே
வந்து கூட அவர்களைக் நோக்கி, வன்மை அமைந்த விநாயகப் பிரானை
மடியில் இருத்தி ஓதுவார் மலையரையன் மகளுக்கினியவன் இவன்யாம்
பெற்ற மூத்த மைந்தன் ஆவன்;  இதனை ஓர்மின்,

     இவனை இவ்வுலகெலாந் தொழுதெழும் இறைமையின்
இருத்துகின்றோம், குவிமுடி சூட்டுவான் வேண்டுப கரணநீர்
கொணர்மின் என்றே, அவர் அவை கொணர்ந்தபின் மைந்தனை
மடங்கல்ஆ தனத்தின் ஏற்றிச், சிவபிரான் திருவபி டேகநீ ராட்டினன்
மகுடஞ் சேர்த்தான்.                                     13

     இவனை இவ்வுலகங்கள் யாவும் தொழுது வழிபடும் தலைமைத்
தானத்தில் இருத்துகின்றோம். கவிக்கின்ற முடிசூட்டு விழாவிற்கு வேண்டும்
பொருள்கள் நீவிர் கொண்டு வம்மின் என்றருள, அவர்கள் அவற்றைக்
கொணர்ந்த பின்னே சிவபெருமானார் மகனாரைச் சிங்காசனத்தில் ஏறச்
செய்திருத்தித் திருமுழுக்காட்டித் திருமுடி சூட்டினார்.

அரசினுக் குரியநல் லணிகளான் அலங்கரித் தன்பு கூரப்
பிரமனை மாயனைத் தேவரை முனிவரைப் பெட்பின் நோக்கி
உரனுடை உமக்கெலாம் நாயகன் இவன்இடை யூற்றி னுக்கும்
கரவிலா நாயக னாகநாம் வைத்தனம் கண்டு கொண்மின்.   14

     அரசுஏற்றற்குரிய நல்லாடை அணிகள் பிறவற்றால் அலங்கரித்து
அன்பு பெருகப் பிரமனையும், திருமாலையும், தேவரையும், முனிவரையும்
விருப்பொடும் நோக்கி ‘‘இவன் வலிமையுடைய உங்கட்கெல்லாம் நாயகன்
ஆவன். விக்கினங்களுக்கும் வெளிப்பட நாயகனாக நாம்வைத்தனம் கண்டு
கொண்மின்!”  

தீயவத் தானவர்க் கூறிழைப் பான்இவன் என்று செப்பும்
தூயவன் வாய்மொழி தலைமிசைக் கொண்டனர் துதித்தி றைஞ்சி
மாயவன் முதலியோர் கணேசனை வணங்கினர் கையு றைகள்
ஏயுமா றுதவினர் விடைகொடு தத்தம திருக்கை சேர்ந்தார்.     15