வலம்புரி விநாயகப் படலம் 171


     ‘இவன், கொடிய அசுரர்கள் செயலுக்கு இடையூறு செய்வான்’ என்று
கூறும் புனிதன் திருவாய்மொழியைத் தலைமேற் கொண்டனர்; தொழுது
தோத்திரங்கள் சொல்லித் திருமால் முதலானோர் கணேசனையும் வணங்கினர்.
தத்தம் தகுதிக்கேற்பக் காணிக்கை வழங்கினர். விடை பெற்றுக் கொண்டு
தத்தமக்குரிய பதங்களை அடைந்தனர்.

விநாயகர் திருவிளையாடல்

கலி விருத்தம்

பொருவருந் தடநெடும் புழைக்கை ஏந்தலும்
இருமுது குரவர்தாள் இறைஞ்சி மேவுநாள்
ஒருவருங் கணங்களோ டுலவி எங்கணும்
திருவிளை யாடலிற் சிந்தை வைத்தனன்.        16

     ஒருவரும் நிகரில்லாத பெரிய நீண்ட தும்பிக்கையுடைய தோன்றலும்,
இருமுது குரவராகிய தந்தை தாயர்தம் திருவடிகளிற் பணிந்தெழுந்து ஒழுகும்
நாட்களுள் ஓர் நாள் விட்டுப்பிரியாத கணங்களோடும் எவ்விடத்தும் உலவித்
திருவிளையாடலிற் சிந்தையைச் செலுத்தினர்.

ஒளித்துநின் றுடன்பயில் உழைச்சி றார்மிசைத்
தெளித்தெழு புழைக்கைநீர்த் திவலை தூஉய்இது
துளித்தது முகிலெனச் சொல்லி உள்ளகங்
களிப்பவான் கருமையைக் காட்டி வஞ்சித்தும்.   17

     மறைந்து நின்று உடன் பயிலும் நீங்காச் சிறுவர் மேல் தெளித்து
எழுகின்ற உட்டுளையுடைய துதிக்கையில் உள்ள நீர்த்துளிகளைத் தூவி
இதனை முகில் துளித்தது எனச் சொல்லி உள்ளுக்குள் மகிழ்ந்து கரிய
மேகங்களைக் காட்டி ஏமாற்றியும்.

புழைக்கையின் மோந்துயிர்ப் பெறிந்து பூமியைக்
குழித்துமுன் அணிந்தன பழமை கூர்ந்தஎன்
றொழித்தகல் பாதலத் துரகம் யாவையும்
இழுத்தெடுத் தணியெனப் புயத்தின் ஏற்றியும்.    18

     துதிக்கையால் தரையை மோந்து நெட்டுயிர்ப்பு விட்டுப் பூமியைக்
குழிபடச் செய்து முன்னம் அணிந்துள்ள பாம்புகள் பழமை மிகுந்த என்ற
கற்றி அகனற பாதலத்தில் (நாகலோகத்தில்) உள்ள பாம்புகள் எவற்றையும்
இழுத்தெடுத்து அணிகலனெனப் புயத்தின் ஏற்றியும்,

ஒன்பது கோள்களும் உடுக்க ணங்களும்
துன்பறப் பிணித்தசை துருவ சூத்திரம்
வன்பனைக் கரத்தினாற் பறித்து மார்பிடை
அன்பமர் நவமணி ஆரமாக்கியும்.             19