18காஞ்சிப் புராணம்


     அத்து, அல்வழிக்கண் வந்த சாரியை, அழல் பாலை-‘எரி நடஞ்செய்
மோட்டகம்’ (காஞ். திருநா. 8) பாலையை மருதம்போல ஆக்கி என்பார்
‘வாட்டி இருத்தி’ என உரைத்தனர்.

தடுத்தெதிர் நின்ற தடங்கரை யெல்லாம்
படுத்து மதன்பயில் பாசறை வீட்டி
மடுக்குளம் ஏரியின் வாட்ட மனைத்தும்
கெடுத்தன மென்று தழீஇக்கிளர் வுற்று.     25

     மேற்செல்ல விடாது எதிர்த்துநின்ற பேரணைகளை அழித்து
(அரணை) சோலைகளையும் கெடுத்து, மடுக்குளம், ஏரிகளின் வாட்டம்
கெடுத்து வளமாகிய நீர் நிரப்பிக் கொடையான் வந்த பெருமிதமுற்று,

வீறி யடாவகை வெஞ்சிறை கோலித்
தூறிடு மள்ளர் தொலைந்தழி வெய்தச்
சீறி யடர்ந்து தெழித்துமுள் வேலி
கீறி வளைந்து கிடங்கினை நீங்கி         26

     செருக்கி அழியாதவண்ணம் பெருங்கரையை வளைத்து மேடிட்டுத்
தடுக்கும் உழவர் எழுச்சி தொலைந்து அழியப்பொங்கி நெருங்கிப் பேரொலி
செய்து முள்வேலியைத் துண்டு படுத்திச் சூழ்ந்து அகழியைக்கடந்து,

     தூறிடு மள்ளர்-பழித்துப்பேசும் வீரர். தெழித்து-உரப்பி. வேலமரம்
வைத்து வளர்த்தலானும், பகைவர்தம் வேல் கொண்டு அமைத்தலானும்
வேலி எனப்பெறும்.

நொச்சியை முற்றி அந் நொச்சியி னுள்ளார்
பச்சிள நொச்சி பறித்தணி யாமே
நச்சிய தும்பை நறுந்துணர் சூடி
அச்செழு மாமதில் முற்றும் அகழ்ந்து.       27

     மதிலை வளைத்து அம்மதிலிடத்தவர் நொச்சி மாலையைச் சூடித்
தம்மதிலைக் காவாமே தாம் விரும்பிய தும்பை மாலையைச் சூடி அதிரப்
பொருது அவ்வளவிய மதிலை முற்றும் அகழ்ந்து,

     மதிலைக்காவல் செய்வோர் நொச்சியணிதல் மரபு. மதிலிடத்தோர்
(அகத்துழிஞையோர்) நொச்சியணியாதபடி வெள்ளம் அதனை அழித்தது.

மேற்படி வேறு

இடித்துவெளி செய்துநக ரெங்கணும் நுழைந்தாங்
கடுத்தமட வார்வயி றலைத்தனர் இரங்கக்
கொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின்
எடுத்துவரு வெள்வரகு கொள்ளுடன் இறைத்து.    28

     இடித்து வெளியாக்கி நகர் முழுதும் புகுந்து, ஆண்டுள்ள மகளிர்
வயிற்றிலடித்துக் கொண்டரற்றப் போகத்திற்குக் காரணமான பல
செல்வங்களையும் (கொள்ளை) மிகுதியாகக் கொண்டு, தம்மிடத்திருந்த