சிவாத்தானப் படலம் 183


     தீப்பிழம்பாய் ஒளிர்கின்ற மழுப்படையை உள்ளங்கைக் கொண்ட 
சிவபிரானது திருவுள்ளத்தில் மகிழ்ச்சி தோன்றத் தீயுடைய குண்டத்திற்
சோமயாகம் புரிய நினைத்தான்; அக் கருத்தினை உணர்ந்த தேவரும்,
முனிவரும், இந்திரனோடும் அவ்விடத்திற்கு வந்தனர்.

மங்கருந் திறல்மொழிக் கிழத்திவா னாட்டவர்
தங்களின் நீங்கிநீர் தன்னகத் துற்றனள்
பங்கயன் வேள்வியைப் பற்றும்அக் காலையில்
துங்கமார் தருக்களில் தொக்கனள் என்பவே.     11

    கேடிலாத வலிமை அமைந்த நாமகள் வானுலகோர் தங்களின் அகன்று
நீரிடைக் கரந்தனள். பிரமன் யாகத்தை மேற்கொள்ளும் அப்பொழுதி
உயர்ச்சி மிகும் மரங்களில் நுட்பவடிவின் மறைந்தனள்.

    என்ப என்னும் இந்த அசைநிலையைச் சீவக சிந்தாமணியில் யாண்டும்
காணலாம்.

எழில்வளர் நாமகள் என்றும்இவ் வுலகிடை
முழவினில் வீணையில் முழங்குதீங் குரல்படுங்
குழலினில் இசையெனக் குலவுகின் றாளெனப்
பழமறை முழுவதும் பன்னும்இவ் வகையரோ.     12

     அழகு வளர்கின்ற சரசுவதி எந்நாளும் இவ்வுலகில் உள்ள மத்தளம்,
வீணை, ஒலிக்கின்ற இனிய ஒலி எழும் (புல்லங்)குழல் இவற்றிடை இசை
வடிவமாகத் திகழ்கின்றனள் என்றித்திறம் தொன்று தொட்டுள்ள வேதங்கள்
யாண்டும் முழங்கும்.

ஆதலிற் காண்கிலான் அயனுஞ்சா வித்திரி
வேதகா யத்திரி என்னும்மின் னாருடன்
ஏதமில் தீக்கையுற் றிருமகச் சாலையுள்
போதலுங் கலைமகள் கேட்டுளம் புழுங்கினாள்.   13

   ஆதலாற், பிரமனும் கலைமகளைக் காணதவனாகிச்சாவித்திரி,
வேதகாயத்திரி, யென்னும் மனைவியருடனே குற்றமில்லாத தீக்கை
மேற்கொண்டு பெரிய வேள்விச்சாலையுட் புகுதலும் நாமகள் கேட்டு
உள்ளம் வெதும்பினாள்.

நாவின் கிழத்தி நதியாய் வருதல்

திருமகச் சாலையைப் பாழ்படச் செய்வலென்
றிருவிசும் பூமிநாள் இடித்தெனக் கொதித்தெழுந்
தொருநதி வடிவுகொண் டுருகெழத் தோன்றினாள்
கருநிலை உயிரெலாம் ஈன்றருள் காரணி.         14

     கருவுறற்கு ஏதுவாகிய ஆன்மாக்களுக்கு உடம்பு கொடுக்கும் சரசுவதி தெய்வத் தன்மை அமைந்த வேள்விச் சாலையை அழிப்பேன்