என்று கற்ப முடிவில் எழும் மேகங்கள் வானிடை இடித்தல்போலக் குமுறி எழுந்து சினங்கொண்டு ஓர் நதி வடிவங்கொண்டு யாவருக்கும் அச்சம் மிகும்படி வந்தனள். கலிநிலைத் துறை மலர்மிசை வருதிசை முகன்உயர் மகவினை புரிஇடமே அலஅவன் உறைஉல கமும்உடன் அழிவுசெய் திடஎழல்போல் பலகுமி ழிகள்அலை திரைநுரை பயில்வுற அகல்ககனத் தலமிசை நிமிர்விசை யொடுவரு தகையது குலநதியே. 15 | பெருமை பொருந்திய அந்நதி, திருமாலின் உந்திக் கமலத்துத் தோன்றிய நான்முகன் செய் உயர்ந்த வேள்வித் தலத்தையே அன்றி அவன் வாழ்க்கையிடமாகிய சத்தியலோகத்தையும் ஒருங்கழித்தற் பொருட்டு எழுதலை ஒப்பப் பல நீர்க்குமிழிகளும், அலைகளும், திசைகளும், நுரைகளும் நெருங்க அகன்ற வானிடத்தின் மேலும் நிமிர்ந்து வேகமாக வருந் தன்மையையுடையது, வரிஅளி யினம்உளர் நறைமது மலரவன் மகவினையைப் புரிவுற இடம்உத வியதொரு புவிஇது எனவெகுளா விரிபண மணிவிட அரவிறை வெருவர உடல்நெளிய அரிலறு கடல்நிலம் முழுவதும் அகழ்வது குலநதியே. 16 | வரிகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற மணத்தையும் தேனையும் உடைய தாமரை மலரில் உறை பிரமன் வேள்வியைச் செய்ய இடம் உதவிய கொடிய பூமி ஈதென வெகுண்டு, விரிந்த படமும், மாணிக்கமும், விடமும் உடைய பாம்பரசனாகிய ஆதிசேடனும் உடல் நெளிந்து அஞ்சவும் குற்றம் அற்ற கடல் சூழ்ந்த நிலம் முழுவதையும் அகழும் இயல்பினது, மேன்மை அமைந்த நதி. விரவிய மறைவிதி யுளிமக வினைபுரி உபகரணத் திரவிய முழுதுத வினஇவை எனஎழு சினமதனால் பரவிய புனல்நிறை கழனிகள் பலகய நிரைபொழிலின் உரவியல் வளமுழு தழிவுசெய் துறுவது குலநதியே. 17 | வரநதி, வேதவிதிப்படி செய்யும் வேள்வி செயற்குரிய துணைக் கருவிகளாகிய பொருள்கள் ஒன்றோடொன்று தலை மயங்கிய இவை முழுதும் தந்தன இவை தாமே என்று எழுகின்ற கோபத்தால் பரந்த நீர் நிறை வயல்கள், பலநீர் நிலைகள், வரிசை பெற்ற சோலைகள் இவற்றினுடைய திண்ணிய வளமுழுவதும் அழிவு செய்துறும் இயல்பினது. ஒடிவறு மகமது தனில்அவி உணவரும் இருசுடரை இடைவழி யினில்எதிர் உறுதலும் எழுவெகு ளியினொடுகைப் பிடியென உடன்விரை வொடுகொடு பெயர்வது பொரஇருகேழ்க் கடிகெழு மரைமலர் பலகொடு கடுகிடு வதுநதியே. 18 | |