சிவாத்தானப் படலம் 189


     இரவின்கண் இருளில் இவ்வேகவதி இந்நகரில் வரும் வரவைக் காண
நீ ஒப்பில்லாத விளக்கொளியைப் போலக் கலந்தாய் ஆதலின் விளக்கொளிப்
பெருமாளென்னப் பேர் வாய்ந்து விளங்குக என்றருளி எமது தந்தையாகிய
பெருமான் இம்முறையாக வேள்வியை ஓம்பிக் காத்தளித்த பின்னர்.

நன்னர் ஆற்று நீரென நண்ணி னாள்த ருக்களில்
மன்னி நிற்ப நோக்கிவன் றாரு விற்செய் தண்டினோ
டின்ன வாணி தன்னைஏற் றேய்ந்த தீக்கை யுற்றனன்
துன்னு சீர்க்க லையினாற் சோமம் ஏற்ற பின்னரோ.    33

     நலமமைந்த ஆற்று நீரென நண்ணிய கலைமகள் மரங்களில் நிலை
பெற்றிருப்ப அறிவால் நோக்கிய வலிய தருக்களில் செய்யப்பெற்ற
அத்தண்டினை ஏற்று அதனிடை விரவிய முறையின் சரசுவதியை
உடன்கொண்டு பொருந்திய தீக்கை உற்று சிறப்புத் துன்னும் அம்சத் (கலை)
தினால் சோமயாகம் மேற்கொண்ட பின்,

     இப்படலம் 11,15, ஆம் செய்யுளை நோக்குக. நோக்கம்-நோக்கு அல்
நோக்கம்.

இன்ன வட்ப குத்திநீ இருத்து விக்கெ னப்படும்
அன்ன வர்க்கெ னக்கிளந் தம்பு யத்தன் அக்கதை
நன்ம யித்தி ராவரு ணன்க ரத்த ளிப்பஅம்
மின்னை வாங்கி மீட்டவர் வேதன் மாட்டி ருத்தினர்.   34

     யாக புரோகிதரெனப் பெறும் அத்தன்மையால் இக்கலைமகளை
அத்தண்டத்தினின்று வேறு பிரிப்பாய் நீ என்று கூறிப் பிரமன்
அத்தண்டத்தை அகத்திய முனிவர் கையிற்கொடுக்க அந்தக் கலைமகளை
அத்தண்டத்தினின்றும் வாங்கிப் பிரித்து அவ்விருத்துவிக்குகள் அப்பிரமன்
பக்கத்திலிருத்தினார்கள்.

மேற்படி வேறு

மீண்டு திசைமுகன் றன்பால் மேவிய வாணி மகிழ்ந்தாங்
கீண்டிய தன்னுருக் கொண்டே எச்சத் துணைவியு மாகிக்
காண்டகு பாங்கர் இருப்பக் காதலன் வேள்வி முடித்தான்
ஆண்டை விதிமுறைத் தெண்ணீர் ஆடினன் வல்வினை
                                     வென்றான்.   35

     மீளவும் நான்முகன் தன்னிடத்துப் பொருந்திய கலைமகள் மகிழ்ந்து
அவ்விடத்துத் தன் வடிவை விரையக்கொண்டு யாக பத்தினியாய் அழகு
மிகத் தன் கணவன் பக்கத்திலிருப்ப அவ்வம்மை கணவனாகிய பிரமன்
வேள்வியை முற்றுவித்து அப்பொழுதே விதிப்படி அவமிருத ஸ்நானம்
செய்து வலிய வினைகளின் நீங்கினான்.

     யாக முடிவில் செய்யும் அவமிருத ஸ்நானம்:  ‘புகழ் அபவிரத நன்னீர்
ஆடினான்’ என வருதல் காண்க. (கச்சிம. 21). பாங்கர்-நல்லிடம்.