மடப்பம் வாய்ந்த நடையினையுடைய கலைமகளின் போக நுகரும் பிரமன் அவரொடும் போய் துன்பம் தீர்ந்த இனிய காட்சி அமைந்த வைகுந்த உலகத்தை நண்ணி ஆயிரம் படங்கொண்ட ஆதிசேடனாகிய பாயலில் முனிவர்கள் துதிசெய்யத் திருமகள் பாததாமரைகளைத் தைவரச் செறிந்த சிறகுகளையுடைய கருடாழ்வார் முதலியோர் சூழ்ந்திருப்ப யோக நித்திரையில் விரும்பியிருந்த நாயகனைக் கண்களி கூரத்தரிசித்தனன். மலரவன் முதலோர் மாயனைவேண்டல் கண்டுநாத் தழும்பத் தனித்தனி துதித்துக் கண்துயில் எழுப்பி முன் வணங்கி, முண்டகன் முதலாஞ் சுராசுரர் குழுமி மொழிவரால் இறப்பினுக் கஞ்சி, ஒண்டளிர்ச் சரணஞ் சரணம் என்றடைந்தேம் உலப்பினைக் கடக்குமா றெமக்குத், தண்துழாய் அலங்கற் கருணையங் கடலே சாற்றென நாரணன் எழுந்து. 5 கண்டு நாத்தழும் பேறத் தனித்தனி துதி செய்து துயிலெடை நிலையால் துயிலெழுப்பித் திருமுன்னர் வணங்கி மலரோன் முதலாம் சுரரும் அசுரரும் நெருங்கி மொழிவர் ‘யாம் இறப்பினை அஞ்சினோம்; ஆகலின் விளக்கமுடைய தளிரையொக்குந் திருவடிகளைப் புகலடைந்தேமாகிய எங்கட்கு இறப்பினைத் தவிர்க்கும் வகை தண்ணிய துழாய் மாலையைத் தரித்த கருணையங்கடலே சாற்றுக’ என நாரணன் எழுந்து. நெடிதுபோ தெண்ணிச் செய்வகை துணிந்து நீயிர்மற் றஞ்சலிர் இனிநாம், முடிவுறா திருப்பக் கடல்கடைந் தெடுத்து முனிவறப் பருகுவாம் அமிழ்தம், கடிபடும் அமிழ்தம் பருகிடின் இறப்பைக் கடக்கலாம் என்றலுங் களிகூர்ந், தடியிணை வணங்கிக் கடையுமாறெவ்வா றளக்கரை எனவினா யினரால். 6 நீண்டபொழுது சிந்தித்துச் செயல் வகையைத் தெளிய உணர்ந்து ‘நீவிர் அஞ்சுதலைத் தவிர்வீர்! நாம் இனி இறவாதிருத்தற்குத் திருப்பாற் கடலைக் கடைந்தெடுத்து வெறுப்பற (விருப்புற) அமிழ்தத்தைப் பருகுவாம்; நறுஞ்சுவையுடைய அமிழ்தைப் பருகிடின் மரணத்தைத் தவிர்க்கலாம்’ என்று கூறிய அளவிலே மகிழ்ச்சிமிக்குத் திருவடிகளில் வணங்கித் ‘திருப்பாற் கடலைக் கடையும் வகை எங்ஙனம் என’ வினாவினர். இந்திரை கொழுநன் உளத்திடை எண்ணி எறிபுனல் அருவியஞ் சாரல், மந்தரப் பறம்பு மத்தென நாட்டி வாசுகி கயிறெனப் பூட்டிச், சுந்தரத் திருப்பாற் கடலினைக் கடைந்து சுவை அமிழ்தெடுத்துமென் றுரைப்ப, அந்தநாள் அவர்தாம் பெற்றபேருவகை யாரெடுத் தியம்பவல் லவரே. 7 இலக்குமி நாயகன் உளத்தினில் நினைந்து, ‘அலை எறிகின்ற புனல் கொண்ட அருவி சூழ் சாரலினையுடைய மந்தர மலையை மத்தாக |