நாட்டி வாசுகியாகிய பாம்பைக் கயிறாகப் பூட்டி அழகிய திருப்பாற்கடலைக் கடைந்து சுவையுடைய அமிழ்தம் பெறுதும், என்று விளக்கம் கூறிய அப்பொழுது அவர்கள் தாம் பெற்ற பெருமகிழ்ச்சியை யாவரெடு்த் தியம்ப வல்லவர். கடல் கடைந்தமுது காண முயலல் கரைபொரு திரங்கும் வெண்டிரைத் திருப்பாற் கடலிடை யாவரும் எய்தி, நிரைமணிக் குவட்டு மந்தரம் நிறுவி நெளிஉடல் வாசுகி சுற்றி, வரைபடு திரள்தோள் அசுரருஞ் சுரரும் வலிப்புழி அவர்தமை நோக்கி, விரைநறாத் துளிக்கும் பசுந்துழாய் அலங்கல் விண்ணவன் ஒன்றுபே சுவனால். 8 கரையிடை மோதி ஒலிக்கும் வெள்ளிய திரைகளையுடைய பாற்கடலில் யாவரும் எய்தி வரிசையாக் கிடக்கின்ற மணிகளைக்கொண்ட சிகரங்களை யுடைய மந்தர மலையை நிறுவி நெளிகின்ற உடலுடைய வாசுகியைச் சுற்றி மலையை ஒத்த திரண்ட தோளசுரருந் தேவரும் இருதலை பற்றி வலித்திழுக்குங் காலை நறுமணம், தேன் இவற்றைச் சிந்தும் பசிய துளவ மாலையணிந்த திருமால் அவர் தங்களைப் பார்த்து ஒன்று கூறுவர். இருதிறத் தவருள் வான்சுவை அமிழ்தம்எறுழினாற் கடைந்தெடுத் தவரே, பருகிடத் தகுமால் ஏனையோர் எய்தற் பாலதன் றென்பது கேட்டுப், பொருதிறல் அசுரர் மகிழ்ந்தெழுந் தார்த்துப் பொறிஅரா இருபுடை பற்றித், தருவலி மிகையால் ஈர்த்தனர் அசலம் தன்பெயர் நாட்டிய தன்றே. 9 வானவர் தானவராகிய இரு பகுப்பினருள் தம் வலிமையாற் கடைந்து மிகுசுவையுடைய அமிழ்தைக் கண்டவரே பருகிடத்தக்கவர் ஆவர். பிறர் எய்தற் பாலரல்லர் எனக் கூறக்கேட்டுப் போர் செய்யும். வலிமை அமைந்த அசுரர் மகிழ்ச்சியும் எழுச்சியும் கொண்டு ஆரவாரித்துப் புள்ளிகளையுடைய வாசுகியின் இருமருங்கும் பற்றி மிகு வலிகொண்டிருந்தனர். அசலம் பிறழாது நின்று தன்பெயரை நிலைநிறுத்தியது. அமிழ்தம் கண்டவரே அதற்குரியர் எனக்கேட்டு வலியுடையேம் யாமே என மதித்தமையின் அசுரர் ஆரவாரித்தனர். அசலம்-அசைத லில்லது பற்றி மலைக்குப் பெயர். அசையாது நின்று பெயரை நிறுவியது என்க. இயக்கல்ஆற் றாமை இளைத்ததா னவரை எதிருறுங் கடவுளர் நோக்கி, வியத்தக எழுந்து நீர்இனி விடுமின் விடுமின்என் றெய்திவா சுகியை, வயத்துடன் பற்றி ஈர்த்தனர் அவரும் வலிஇழந்தெய்த்தனர் நின்றார், செயத்தகுந் திறம்ஏ தினியென யாருஞ் சிந்தையிற் கவலைகூர் பொழுது. 10 |