பெருவலிமை பெற்ற சுரரும் அசுரரும் கூடி வெற்றி பெறற்கு இயலாத வகையினில் எளியேனாகிய ஒருவன் வல்லன் ஆவனோ யாமெல்லோமும் ஒருங்கு கூடிக் கடலைக் கடைவேமாயின் தெய்வம் செய்தலைக் காண்பேம் என நகைத்துக் கூறித் தேவரையும் அசுரரையும் வருகென அழைத்து வாலி பெரும்பாம்பின் வாலினது பக்கத்தில் பற்றி நின்றிழுத்தான். நாம் முயலுதும், தெய்வம் விட்ட வழி காண்டும் என்போன் தெய்வ வலியை அவர்கள் பொருட்படுத்தாமைக் குறிப்பிற் கண்டி கழ்ந்தனன் என்பார் நகைத்தென்றனர். பருங்கொலைப் படத்தை அசுரருஞ் சுரரும் பற்றினர் தனித்தனி ஈர்த்தும், ஒருங்குநின் றீர்த்தும் ஆற்றலா துடைந்து தன்புடை ஒதுங்குதல் காணூஉக், கருங்கழல் வாலி விடுமின்நீர் என்னாக் கட்செவி வாலமும் பணமும், இருங்கையிற் பற்றி முறுகுற வாங்கி ஈர்த்தனன் கடைந்தனன் புணரி. 14 கொலைசெய் பெரும்படப் பக்கத்தை அசுரரும், தேவரும் பற்றி ஓரோர் சாராரே ஈர்த்தும் ஒருங்கு கூடி இழுத்தும் ஆற்றாது தோற்றுத் தன் பக்கம் வந்தொதுங்குதலைக் கண்டு (சமமாகாமை கண்டு) பெருமை பொருந்திய வீரக்கழலை அணிந்த வாலி ‘விடுங்கோள் நீவிர்’ என்று பாம்பினுடைய வாற்புறமும் தலைப்புறமும் ஆகிய இருபக்கமும் இருகையினும் பற்றிக் கடுமை பொருந்த வலித்திழுத்துக் கடலைக் கடைந்தனன். வாலம்-வால்; வேனல் வரி அணில் வாலத் தன்ன’ (புறம் 307-4) ஒருகரம் முடக்கி ஒருகரம்நீட்டி உவவுநீர் மதுகையிற் கடைபோ, தருவரைக் குடுமி மந்தரங் கடலுள் ஆழ்தலுங் கக்சப வடிவாய்த், திருமறு மார்பன் தாங்கஅச் சயிலம் தெண்கடல் மீச்செல மிதப்பக், கருமுகில் வண்ணன் கரமிசை நீட்டிக் கனங்கொள இருத்தினன் வரையே. 15 ஒரு கரத்தை முடக்கி மற்றோர் கரத்தை நீட்டி இங்ஙனம் பல முறை நீட்டியும் முடக்கியும் பாற்கடலை வலிமையாற் கடைகின்றபோது மத்தாகிய மந்தரமலை கடலுள் ஆழ அப்பொழுதே சீவற்சமென்னும் மறுவினை மார்பின்கண் உடைய திருமால் ஆமை வடிவாய் அம்மலையைத் தாங்க மேலெழுந்து கடலில் மிதத்தலான் கரிய மேகம் போன்ற அம்மாயோன் கரத்தை மேலே நீட்டி மலையைக் கனமுண்டாக அழுத்தினன். அறுசீரடி யாசிரிய விருத்தம் இருத்திய பின்னரி யேறும் இடம்வல மாக வரையைத் திரித்துக் கடுகச் சுழற்றித் தெண்டிரை வேலை அலறிச் சுரித்து விரித்துப் பரந்து துள்ளிக் கொதித்தெழுந் தாட வருத்திக் கலக்கி மறுக வலித்துக் கடைந்திடு காலை. 16 | |