206காஞ்சிப் புராணம்


     திருநந்தி தேவர் திருப்பிரம்பை அசைத்தலால் அழைத்தருள
அன்றலர்ந்த மலரின்மேல் விளங்கும் பிரமனும், திருமாலும் குவித்த
கரத்தொடும் வந்து நெருங்கிப் பக்கத்தில் உறுதலும் அழகிய ஒளி தவழ்
புன்சிரிப் பரும்பப் பசிய தொடியினை அணிந்த உமையம்மையை ஒரு
கூற்றிற் கொண்ட பரம் பொருள் மற்றி தனைக் கூறும்.

     திருமால், பிரமன் இருவர் பதமும் திருநந்தி தேவர் பிரம்பால்
அழைக்கும் அளவுக்குட்பட்ட பெருமையது. ‘மலர்க்கொன்றைத் தொங்கலான்
அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே’ (திருஞா. )

மாயன்நீ இருந்தைஉரு வாய்த்தனைஎன் மலர்மேவும்
தூயநீ புகைஉருவந் தோற்றினைஎன் னென்றருளும்
ஆயபொழு தாண்டாண்டுக் கணநாதர் அலைப்பமெலிந்
தேயமுறை முறையிட்டார் புறம்நின்ற இமையவர்கள்.    35

     கரியோனே! நீ கரியினது நிறம் வாய்த்தனை என்னை? மலரில் மேவும்
பொன்னிறமுடைய தூயனாகிய பிரமனே புகை வடிவம் பெறுதற்குக் காரணம்
எவன்? என்று வினாவியருளும் அது காலை ஆங்காங்குக் கணநாதர் வருத்த
உளம் மெலிந்து பொருந்திய முறையில் முறையிட்டனர் புறத்தில் நின்ற
தேவர்கள்.

     ஏயமுறை: திருமால் பிரமர் தம் துயரை அடக்கி வெளிவிட உள்ளனர்.
அவரிற்குறைந்த அறிவும், பதமும் உடையோர் தத்தம் தகுதிக்கேற்ப
ஆரவாரித்து முறையிடல்.

ஆங்கவர்கள் மிகமுழக்கும் அரஓசை திருச்செவியேற்
றீங்கிதெவன் என்றருள அம்புயத்தோன் எதிர்வணங்கிப்
பாங்குடைய சுராசுரர்உன் பாதங்கள் தொழப்போந்தார்
பூங்கழற்கால் வெம்பூத கணந்தடுப்பப் புறம்நின்றார்.    36

     தேவர்கள் மிக முழக்கும் ‘அரஹர’ என்னும் ஒலியைத் திருச்செவியில்
ஏற்று ‘இம்முழக்கம் என்’ னெனப் பெருமான் வினவியருள அவர் திருமுன்
வணங்கிப் பிரமன் ‘நல்லொழுக்கமுடைய சுரரும், அசுரரும் உன்னுடைய
திருவடிகளைத் தொழப் போந்து பொலிவுடைய கழலையணிந்த வெவ்விய
பூதகணந் தடுத்தலால் புறத்தில் நின்றனர்.

விளித்தருளிக் கருணைசெய வேண்டுமெனத் திருநோக்கம்
அளித்தெந்தை நந்திதனைப் பணித்தருள அவன்எய்தித்
தெளித்தெழுபல் கணத்தோரைத் தடுத்துள்ளாற் செல்கவெனத்
துளித்தமதுப் பிரம்பசைத்துச் சுராசுரரைப் புகுவித்தான்.    37

     அழைத்தருளிக் கருணை செய்யவேண்டு’மெனக் குறையிரப்ப எம்
தந்தையார் திருநந்தி தேவர்மீது திருக்கண் சாத்துதலாற் பணித்தருள அவர்
சென்று உரப்பி எழுக்கின்ற பல் பூத கணத்தவரைத் தடுத்து ‘உள்ளே புகுக’
எனத் தேன் திவலை சிந்துகின்ற பிரம்பை அசைத்துச் சுரரையும் அசுரரையும்
புகுவித்தனர்.