காலவன்மையால் வரும் பாவங்களை இட வலிமையால் போக்கிக் கொள்ள எண்ணினர். அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழிலாகலின் அஞ்சினார் என்றனர். அங்கண் மெய்த்தவர் யாவரும் அவனடி வணங்கி இங்கெ மக்குநீ மறைமுடி புண்மைஈ தென்னச் செங்கை நெல்லியின் தெளிவரத் தெருட்டுகென் றிரந்தார் வெங்கொ டும்பகை வினைக்குறும் பெறிந்துயர் வியாதன். 4 | அக்காசியில் வதியும் உண்மைத் தவமுடையோர் யாவரும் வியாசர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, ‘‘நீ இப்பொழு தெங்களுக்கு உபநிடதங்களின் உண்மைப் பொருள் இதுவாகும் என்று உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெளிவுண்டாகுமாறு தெளிவி’’ என வேண்டினர். மிகக்கொடிய வினையாகிய பகைக்காட்டை ஞானவாளால் எறிந்தமையால் உயர்ந்த வியாத முனிவர், நூல்களின் வன்மை மென்மைகளை அறிந்து இடத்திற்கும், காலத்திற்கும், ஏற்புடைப் பொருளிற்கும் கொடுக்கப்பட்டிருக்கும் நிலைகளைக் கழித்து முன்னொடு பின் முரணாதவாறு காண்டல் அரிதாகலின் முடிந்த உண்மைப் பொருளை வினாயினர். மிருதி நூல்புரா ணத்தொகை வேதநூல் அங்கம் இருவ கைப்படு நியாயம்ஆ யுள்மறை எழிற்கந் தருவ வேதம்வில் வேதமோ டருத்தநூல் இவற்றின் பொருளின் உண்மைமற் றிதுஇது வெனத்தனி புகன்றான். 5 | மிருதி பதினெட்டனையும், புராணம் பதினெட்டனையும், வேதம் நான்கனையும், அங்கம் ஆறனையும், நியாய நூல் இரண்டனையும், ஆயுள் நூலையும், கந்தர்வ நூலையும், வில்வித்தைகளையும், பொருள் நூலையும் தனித்தனியாக அவற்றின் உண்மை முடிபுகளைக் கூறினான். பெருவ லித்தவ முனிவரர் கேட்டுளம் பிறழா தொருவ ழிப்படத் துணிந்தொரு வார்த்தையின் எமக்குச் சுருதி நூல்முடி பிதுவெனத் தொகுத்துரை என்றார் மருளின் மூழ்கிய சிந்தையின் வியாதமா முனிவன். 6 | பெருவன்மை தவத்தால் வாய்த்த முனிவர்கள் அவ்வனைத்தையும் ஒருமுகமாகக் கேட்டு ‘மனம் திரியாது ஒருவழிச் செல்ல அறுதியிட்டு ஒரு வார்த்தையின் எங்கட்கு வேதநூல் முடிபிது என வகுத்துச் சொல்லிய தமையும் தொகுத்துச் சொல்’ என்றனர். மயக்கத்தின் மூழ்கிய சிந்தையை யுடைய வியாச முனிவரன். உறுவர் யாரையும் நோக்கிமுன் உரைக்குமா றாகத் தறுகண் ஆண்மையிற் கூறுதல் உற்றனன் தவத்தீர் அறிவு நூலெலாம் பன்முறை ஆயினுந் தெளியப் பெறுவ தொன்றது நாரண னேபரப் பிரமம். 7 | |