|      முனிவர் யாவரையும் நோக்கால் தழீஇக்கொண்டு முன்பு கூறிய    விளக்கத்திற்கு முரணாக வன்கண்மையின் ஆட்சியால், ‘தவமுடையீர்,
 அறிவு நூல்களனைத்தையும் பலகால் ஆராய்ந்தாலும் ஐயமறத் தெளியப்
 பெறுவது ஒன்றே உள்ளது. அது தான் நாராயணனே முழுமுதல்வன் எனத்
 தெளிவதாம்.
      உறு என்னும் உரிச்சொல்லடியாகப் பிறந்த பெயர் மிக்கோர் ஆகலின்,    முனிவரைக் குறிப்பதாம்.
 		| வண்ண மாமறை நூற்குமேல் நூலிலை மதியோர் எண்ணு கேசவன் றனக்குமேல் தெய்வமும் இல்லை
 கண்ணும் எவ்வகை நூல்கட்குந் துணிபிது காண்மின்
 உண்மை உண்மைஈ தெனக்கரம் எடுத்துநின் றுரைத்தான்.   8
 |       ‘‘சந்தங்கள் அமைந்த பெருமறைக்கு மேம்பட்ட நூலும் இல்லை;     அறிவுடையோர் தியானஞ் செய்கின்ற நாராயணனுக்கு மேற்பட்ட தெய்வமும்
 இல்லை. ஆராயும் எத்திறத்து நூல்களும் கண்ட முடிந்த பொருள் இதனைக்
 கருத்திருத்துமின்; இது சத்தியம்!  சத்தியம்!!” எனக்கரத்தை மேலே உயர்த்திக்
 கொண்டு கூறினன்.
      கரத்தை மேலுயர்த்திச் சூளுரைத்தல் இதனால் அறியப்படுகிறது.	 		| கேட்ட மாதவர் வெரீஇயினர் கிளர்மறைப் பொருட்குக் கோட்ட மாம்இது எம்மனோர் கோட்டக்க தன்றால்
 நாட்டி ஈங்கிவன் புகன்றதென் னென்றுளம் நடுங்கி
 நீட்டு செஞ்சடை முனிவரன் றன்னைநேர் நோக்கி.    9
 |       செவி ஏற்ற பெருந்தவ முனிவரர் அஞ்சினர். ‘‘விளங்குகின்ற     வேதத்திற்கு மாறுபா டுற்றதாம் இப்பொருள். எம்போல்வார் எவரும்
 கொளத்தகாதது ஆகும். இப்பொழுது இவன் வலியுறுத்திக் கூறுவதென்னை’’
 என்று உள்ளம் நடுநடுங்கி நீண்ட சிவந்த சடையினையுடைய முனிவரனைப்
 பொருந்த நோக்கி.
      கோட்டம்-விருத்தம், சிவவேடம் புனைந்து கூறினன் என்பார்     செஞ்சடை முனிவரன் என்றனர். நீட்டு என்னும் பிறவினை தன் வினைக்கண்
 நின்றது.
 		| வாத ராயண நீஇவண் மொழிதரு மாற்றம் வேத நூற்பொருள் உண்மையே யாமெனில் விசுவ
 நாத னார்திரு முன்பெமக் குரைஎன நவின்றார்
 ஓது கேனென மூர்க்கனும் எழுந்துசென் றுற்று.      10
 |       ‘வியாதனே, நீ ஈண்டுப் பேசுகின்ற பேச்சு வேத நூலின் சத்திய    வாக்கேயானால், விசுவநாதப் பெருமானார் திருச்சந்நிதியில் எங்களுக்குச்
 சொல்’’ என யாவரும் ஒருமுகமாகக் கூறினர். மூர்க்கனும் கூறுவே’ னென
 ழுந்து சென்றடைந்து,
 |