தொகுதி அமைந்த சிவந்த சடையும் யாவரும் விரும்புகின்ற தவக்குறிக்கோளும் உடையீர்! குற்றத்தைப் போக்கி அருளுகின்ற விளக் கொளிப் பெருமான் இயல்பினைக் கூறினம். கருடன் வழிபாடு செய்த சிறப்பினையுடைய வெற்றியைப் பெறற்கிடனாகிய முத்தீச்சரத்தின் வரவினைக் கூறுவாம். கத்துரு சுபருணை காசிபர்முன் கலாம் மன்னு காசிபன் றன்மனை யாட்டியர் பன்னு கத்துருப் பாவை சுபருணை என்னும் மாதர் இருவருந் தம்உரு நன்ன லத்தை நயந்துகொண் டாடினார். 2 | பெருமை மிகும் காசிப முனிவர் தம் மனைவியர் கத்துரு சுபருணை எனப்பெயர் பெறும் இருவரும் தத்தம் வடிவின் பேரழகைத் தாங்களே போற்றிப் பாராட்டினர். அழகியர் என்பார் ‘பாவை, மாதர்’ என்றனர். தத்தம் மேனித் தகைநலஞ் சாற்றுபு மெய்த்த பூசல் விளைத்தனர் தோற்றவர் உய்த்த வெஞ்சிறை மேவுகென் றொட்டினார் அத்த வத்தனை அண்மி வினாயினார். 3 | தங்கள் தங்கள் உடம்பழகின் நுட்பங்களை விரித்துரைத்து (விளையாட்டாக அன்றி) மெய்யே போர் மூண்டனர். அழகில் தோற்றவர் வைக்கப்படுகின்ற கொடிய சிறையிற் கிடப்பாராக என்று சபதஞ் செய்தார். அந்தத் தவமுனிவராகிய காசிபரை அணுகித் தம்முள் ‘பேரழகியர் யாவர்’ என வினாவினர். பைத்த பாப்பகல் அல்குற் பனிமொழிக் கத்து ருப்பெயர்க் காரிகை வேறலாற் சுத்த நீர்மைச் சுபருணைப் பேரிய மைத்த கண்ணியை வெஞ்சிறை மாட்டினாள். 4 | பாம்பினது படம் போன்ற அகன்ற அல்குலினையும் மெல்லிய மொழியினையும் உடைய கத்துரு என்பவள் வெல்லுதலாலே தூய இயல்பினையும் சுபருணையென்னும் பெயரினையும் உடைய மையுண்ட கண்ணியைக் கொடிய சிறையிடைப் படுத்தனள். வீடு செய்யென அங்கவள் வேண்டலுங் கூடு மூன்றாம் விசும்பிற் குளிர்மதிப் பாடு தோன்றும் அமிழ்தம்அப் பண்ணவர் நீடு காவலின் உள்ளது நேரிழாய். 5 | |