அவ்விடத்தில் அமிழ்திற்குக் காவலர் வீரங்கெடப் பொருது பின் எதிர்த்த வன்கண்மையுடைய ஐராவதத்திற்குத் தலைவனாகிய இந்திரனைப் பொன்னிறச் சிறகின் காற்றினால் புறங்காண ஓட்டினான். அமிழ்தம் வௌவி அகல்வுழி மால்எதிர்ந் துமிழ்சி னத்தின் உருத்துவெம் போர்செயத் தமிய னாய உவணனுந் தாக்கினான் இமிழி சைப்போர் இருவர்க்கும் மூண்டதே. 10 | அமிழ்தத்தைக் கைப்பற்றிக் கொண்டகலுங் காலைத் திருமால் பகைத்துப் பொங்கி வழிகின்ற கோபத்துடன் உள்ளம் கொதித்துக் கொடிய யுத்தத்தைச் செய்ய நிராயுத பாணியாய கருடனும் மோதினான்; ஒலிக்கின்ற ஓசையையுடைய சண்டை இருவர்க்கும் நெருப்புப் போல முறுகி முதிர்ந்தது. ஏழ் டுக்கிய முந்நாள் இருவரும் தாழ்வொன் றின்றிச் சமர்பெரி தாற்றுழி ஆழி மாயன் அகமகிழ் கூர்ந்துயர் பாழி வன்சிறைப் பார்ப்பினை நோக்கியே. 11 | இருபத்தொரு நாள் இருவரும் சலிப்பின்றிப் பெரும் போர்செய்த வழிச் சக்கரத்தையுடைய திருமால் உள்ளம் மகிழ்ச்சி மிக்குச் சிறந்த வலிமையையும், வலிய சிறகினையும் உடைய பறவைக் குஞ்சாகிய கருடனை நோக்கியே, திருமால் வரம் பெறல் வன்புள் வேந்தநின் வீரம் மகிழ்ந்தனன் என்பு டைவரங் கொள்ளென ஈங்கிவன் உன்பெ ருந்திறற் குள்மகிழ்ந் தேன்மற்றென் றன்பு டைவரங் கொள்ளெனச் சாற்றினான். 12 | ‘வலிமை அமைந்த பறவை அரசனே! நின்னுடைய வீரத்தைக் கண்டு மகிழ்ந்தேன், என்னிடத்து விரும்பும் வரத்தைப் பெற்றுக்கொள்’ என்று கூறக், கருடனும், ‘உன்னுடைய பேராற்றலுக்குள்ளம் மகிழ்ச்சி எய்தினேன். என்னிடத்து நீ வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொள்க’ எனக் கூறினன். (என்றன்என்புழித் தன் சாரியை). மாயன் அம்மொழி கேட்டு மகிழ்ச்சியின் தூயை ஓதிய சொல்தவ றாயெனின் நீயெ னக்கு நெடுந்தகை ஊர்தியாய் ஏயும் இவ்வரம் யான்கொள நல்கென்றான். 13 | திருமால் அம்மொழியினைக் கேட்டு மகிழ்ச்சியொடும் ‘பெருந்தகையே! நீ மனமொழி மெய் இவற்றாற் பரிசுத்தம் உடையை ஆவை; |