காயாரோகணப் படலம் 253


     பகர்ந்த ஆண் டொருநூ றிருவகைப் பராத்தம் பற்றறில் வெள்ளிவண்
டோடு, தகர்ந்திட உடைந்து முடங்குகால் ஞிமிறு தழங்கிசைப் பேட்டொடு
நறுந்தேன், நுகர்ந்துபண் பயிற்றும் பொகுட்டலர் கமல நோன்மலர்
அணங்கினுக் கரங்கம், நிகர்ந்தநா வகத்துப் பழமறை கொழிக்கும் நெடுந்
தகைக் கிறுதிவந் துறுமால்.

     மேற் கூறப்பட்ட அவ்வருடம் ஓர் நூறு இருவகைப் பரார்த்த மாகும்.
இக்கால அளவை ஒழிந்தால் வளைந்த காலையுடைய ஆண் வண்டுகள்
இசை எழுப்புகின்ற பெண் வண்டுகளுடன், வெண்ணிறமுடையது ஆகிய
வளவிய இதழ் முறுக்கு அவிழும்படி மிதித்து நறிய தேனைப்பருகிப்
பண்பாடும் பொகுட்டினையுடைய அலர் தாமரை பொறுக்கின்ற சரசுவதிக்கு
அரங்கினை ஒத்த நாவினிடத்துப் பழமை பொருந்திய வேதங்களை
ஆராய்கின்ற பிரமனுக்கு வாழ்நாள் முற்றுப்பெறும்.

     பிரமன் நாவில் கலைமகள் களிநடம்புரிகின்றனள் என்பார் அரங்கம்’
எனக்கூறினர். அடுத்த செய்யுளில் மாயோன் மார்பில் திரு, விளையாடல்
கூறப்பெறும்.

     அங்கது முகுந்தன் றனக்கொரு பகலாம் அம்முறை யாண்டுநூ
றெய்தின், செங்கதிர்ப் பரிதி மழுங்கவிட் டெறிக்குஞ் சேயொளி
விலைவரம் பிகந்த, பைங்கதிர்க் கடவுட் கவுத்துவம் இமைப்பப்
பசுந்துழாய் துயல்வரு மார்பில், கொங்கலர் கதுப்பின் திருவிளை
யாடுங் குரிசிலும் எய்துவன் ஒடுக்கம்.                        5

     பிரமன் ஆயுள் நாள் திருமால் தனக்கு ஒருபகலாகும். அங்ஙனம்
ஆண்டுகள் நூறு நிரம்பினால், சிவந்த கிரணங்களையுடைய சூரிய ஒளி
கெடும்படி சுடர்விடும் சிவந்த ஒளியினையும் விலையின் எல்லையைக்
கடந்ததும் தண்ணிய கிரணத்தினையும், தெய்வத்தன்மையினையும் உடைய
கவுத்துவம் விட்டொளிரும்படி பசிய துளவமாலை அசைகின்ற மார்பில்
நறுமணம் கமழும் கூந்தலையுடைய திருமகள் விளையாடும் திருமாலும்
ஒடுக்க முறுவன்.

     செங்கதிர் ..............குரிசிலும், அவனும் என்னும் பொருள் தருதலில்
சுட்டுப்பெயர் மாத்திரையாய் நின்றது. ‘கற்பா டழித்த கனமா மணித் தூண்
செய் தோளான்’ (சீவக. பதிகம். 14) என்புழிப்போல.

     இருவரும் ஒருங்கே இறவருங் காலை எந்தையே
ஒடுக்கிஆங்கவர்தம், உருவம்மீ தேற்றிக் கோடலாற் காயா ரோகணப்
பெயர்அதற் குறுமால், வருமுறை இவ்வா றெண்ணிலா விரிஞ்சர்
மாயவர் காயம்மேல் தாங்கிக், கருணையால் அங்கண் நடம்புரிந்தருளும்
காலமாய்க் காலமுங் கடந்தோன்.                           6

     திருமாலும் பிரமனும், ஒருசேர அழிவெய்தும் நாள் எம் தந்தை யாகிய
சிவபெருமானே அவர் தம்மை ஒடுக்கி அங்கே அவர்தம் சரீரங்களைத்
தம்மேற் பூண்டு கொள்ளுதலால் ‘காயாரோகணம்’ என்னும் பெயர்