வணக்கம்; ஒப்பில்லாத கருணைக்கடலே வணக்கம்! வண்ககம்!! என்று மனத்துணின்றும் பொங்கிவழிகின்ற பெருவிருப்பினால் தொழுது உள்ளம் உருகிக்கண்கள் நீர்சொரியக் கூறுவான்; எட்டுறுப்புக்கள்; தலை, கைகள், காதுகள், மோவாய், தோள்கள், ஐந்துறுப்புக்கள்; தலை, கைகள், முழந்தாள்கள், ‘மாறிலாதமாக் கருணை வெள்ளமே’ (திருவா. சத, 19) என்னும் அருள்மொழியை எண்ணுக. ஐய னேஉனைச் சரணம் எய்தினேன் அடிய னேன்இனி மற்றொர் பற்றிலேன், பொய்யில் கேள்விசால் பிருகு மாமுனி புகன்ற சாபநோய்க் கஞ்சி நொந்துளேன், உய்யு மாறருள்செய்ய வேண்டும் என் றுரைத்த லந்துநின் றிரப்ப எம்பிரான், மையு லாம் விழிப் பதுமை கொங்கை தோய்மார்பகேளென வாய்மலர்ந்தனன். ‘தலைவனே, உன் திருவடியைப் புகலடைந்தேன் அடியேன், இனி, வேறோர் களைகண் இல்லேன்; மெய்க்கேள்விச் செல்வம் நிரம்பிய பிருகு முனிவரர் கூறிய சாப நோய்க்கு அச்சங்கொண்டுளைந்தேன்; பிழைக்கும் வகை அருள் செய்யவேண்டுமென்று வருந்திக் குறையிரந்த பொழுது. எமது பெருமான் மைதீட்டிய கண்களையுடைய இலக்குமி போகநாயகனே! இதனைக் கேட்பாயாக எனத் திருவாய் மலர்ந்தருள் செய்தனன். கலிநிலைத் துறை நடுஇ கந்திடா நம்அடித் தொழும்பரால் நாட்டப் படுவ தொன்றெது அஃதவ்வப் பயன்றனைப் பயந்தே விடுவ தல்லது பழுதுறா தின்றுநீ மெலிய அடும்இச் சாபமும் அனுபவித் தல்லது விடாதால். 15 | நடுவு நிலைமையிற் பிறழாத நம் அடியவரால் நிலைபெற நிறுத்தப் படுவன எவை எவையோ அவ்வவை தத்தம் பயன்களைப் பயந்தே விடுவன. அல்லாமல் வழுவுவன அல்ல. இந்நாள் நீ மெலிவடைய வருத்தும் இச்சாபப் பயனும் அனுபவித்தன்றிக் கழிவன அல்ல. தாங்கு கொள்கையின் உயர்ந்தநம் அடியவர் தமக்கோர் தீங்கி ழைத்திடுங் கொடியரைச் செகுப்பதே கருமம் ஆங்கும் வல்லிருட் குழிவிழுந் தழுங்குவர் அந்தோ யாங்கண் உய்வர்எம் அடியவர் தமக்கிடர் இழைத்தோர். 16 | ஏந்திய கொள்கையினால் உயர்ந்த நம்முடைய அடியவர் தங்கட்கோர் தீங்கினை இயற்றும் கொடியவரைக் கொலையால் ஒறுத்தலே செயத்தக்க கருமம் ஆகும். மேலும், மறுமையிலும் கொடிய நரகக்குழியில் விழுந்து வருந்துவர். அந்தோ! எம்முடைய அடியவர் தங்கட்குத் துன்பம் செய்தோர் எங்ஙனம் பிழைப்பர். |