நீலநிற மலர்கள் பூத்த காயா மரத்தைப், பொன்போலப் பூத்த கொன்றை மரங்கள் கிளைகளாகிய நீண்ட கரங்களால் தழுவிக் கிடந்தசைதல், திருநீலகண்டப் பெருமான் அந்நாள் மோகினியாய் இயல்பமைந்த திருமாலின் போக நுகர்ந்தமையைத் தெரிய உணர்த்தும். மாசாத்தன் தளிப்படலத்துள் இவ்வரலாறு காண்க. பெண்ண லங்கனி இடைக்குலப் பிடிநடை மடவார் விண்ண லங்கனி மாதரை எழிலினால் வென்று பண்ண லங்கனி மிடற்றவர் பணைத்தமூக் கரிந்து மண்ணி லெங்கணுந் தூக்கிவைத் தெனக்குமிழ் மலரும். 59 | பெண்களுக்குரிய இலக்கணம் நிரம்பிய ஆயர்குல மகளிர், அழகு முற்றிய அரம்பை முதலிய மாதரைத் தம் அழகால் வென்றமையால், தோற்ற அவர்தம் மூக்கை அறிந்து மண்ணிடத்து எங்கணும் தூக்கி வைத்தாற் போலக் குமிழம்பூ மலரும். ஒட்டி மூக்கிழத்தல் பேசப் பெற்றது. மௌவ லங்குழ லார்விழிக் குடைந்துவான் குதிக்கும் நவ்வி மீண்டக லாவகை மகளிர் ஆனனத்துக் கொவ்வு றாதவர் ஆணையிற் றிரியும் ஒண்மதிகண் டவ்வு ழித்தன திருக்கையிற் சிறைப்படுத் தலைக்கும். 60 | முல்லை மலரை யணிந்த ஆய்ச்சியர் விழிக்குத் தன்கண் ஒவ்வாமையின் தோல்வியுற்று வான் தாவும் மானை அவர் முகத்திற்குத் தோற்று அவர் ஏவல் வழித்திரிந்து கொண்டிருக்கும் சந்திரன் தன்னிடத்துச் சிறைப்படுத்தி வருத்தும். உழி-இடம். சந்திரனிடத்துள்ள களங்கத்தை மானென்னும் வழக்குப் பற்றியது. கற்றை வார்குழல் ஆய்ச்சியர் கயல்விழி முகத்தின் பெற்றி யொப்புறப் பெருங்குருந் துச்சிமேல் தாவி ஒற்றை மானுடைக் கலைமதி யதன்நிழ லுறங்கும் மற்றை மானையும் பற்றுவான் கதிர்க்கையால் வருடும். 61 | ஆய்ச்சியருடைய முகத்தினை முழுதும் ஒப்புறலை விரும்பி ஒற்றை மானை அகப்படுத்த கலைச்சந்திரன், பெரிய குருந்த மரத்தின் உச்சியில் தாவி யிருந்து அதன் நிழலில் துயிலும் பிறிதொரு மானையும் கைப்பற்ற வேண்டிக் கிரணக்கையால் அதனை வருடும். நலம்ப யின்றிள வேனிலின் நவிலுமாங் குயில்கள் அலம்பு கார்வரும் போதுவா யடைப்பது முன்னாள் புலம்புகொண்டவர் காரொடுந் தலைவர்தேர் புகுத வலம்பு னைந்துரை வளமொழிக் கிடைதலா னன்றே. 62 | |