இட்டசித்தீசப் படலம் 271


வடதி சைக்கி்றை வரைம டக்கொடி வடிவு நோக்கி இழந்தகண்
ணுடன் அரற்கொரு நட்பும் எய்தினன் ஓது துச்சரு மேளனும்
உடல்கணைக்கரு விழிஉ உருப்பசியுகள கொங்கை மணந்தனன்
மிடல்கொள் கண்ணன் அளித்த சாம்பனுங் குட்ட வெம்பிணி
                                             நீங்கினான்

     குபேரன் இமயமலை வல்லியாரை நோக்கிக் கண் ஒளி மழுங்கி
இத்தீர்த்தப் பயனால் மீள ஒளி பெற்றனன். மேலும் சிவபெருமானுக்கோர்
நண்பனுமாயினன். துச்சருமேளன என்பானும் வருத்துகின்ற அம்பு போலும்
கரிய விழியினையுடைய ஊர்வசியின் கொங்கையைத் தோயும் வாழ்வு
பெற்றனன். வலிமை அமைந்த கண்ணன் ஈன்ற சாம்பனும் குட்டம் என்னும்
கொடிய நோய் நீங்கினான்.

     ஊரு: -துடை; பிரமன் துடையிற் பிறந்தவள் ஆகலின் ஊர்வசி
எனப்பட்டனள். சாம்பன் தந்தையாற் பெற்ற சாபம் நீங்கப் பெற்றனன். 

நிடதம் மன்னிய நளன்அ யோத்திஇராமன்நீள்புகழ்ப் பாண்டவர்
மடனில் இங்கிவர் முத்தி றத்தரும் மருவலாரை அழித்து வென்
றிடன்இ ழந்திடும் இறைமை எய்தினர் இரியும் ஐம்புல வாழ்க்கையோய்
தடவு மென்மலர் இட்ட சித்தி தருந்த டம்படி பேற்றினால்.

     ஐம்புலன்களை அடக்கிய வாழ்க்கையை உடைய ததீசியே!
பெருமையையுடைய மெல்லிய மலர்களைக் கொண்ட இட்டசித்தித் தீர்த்தத்தில்
மூழ்கிய பயனால் நிடத நாட்டு நள மன்னனும், அயோத்தி மன்னனாம்
சீராமனும், பெரும் புகழுடைய பாண்டவரும் ஆகிய அறிவுடைய
இம்முத்திறத்தரும் தத்தம் பகைவரை அழித்து வெற்றி கொண்டு இழந்த
இடங்களுக்கு மன்னர் ஆயினர்.

அறுசீரடி யாசிரிய விருத்தம்

தோற்றமார் வடாது வெந்நோய் துமித்திடுந் தரும தீர்த்தம்
போற்றருங் குணாது விண்ணோர் புகழ்தரும் அருத்த தீர்த்தம்
கூற்றுறுந் தெனாது மாறாக் குரைபுனற் காம தீர்த்தம்
சாற்றிய குடாது முத்தித் தீர்த்தம்அத் தடத்துள் ஓங்கும்.   19

     மங்கலத்தினால் முன்வைத் தெண்ணப்படுகின்ற வடக்கில் கொடு
நோய்களைப் போக்குகின்ற தரும தீர்த்தமும், போற்றுதலைக்கடந்த
கிழக்கில் விண்ணவர் புகழ் அருத்த தீர்த்தமும், புகழ்ச்சி பெறும் தெற்கில்
எஞ்ஞான்றும் ஒலிக்கின்ற நீருடைய காமதீர்த்தமும், பேசப்பெறும் மேற்கில்
முத்தித்தீர்த்தமும், அவ்விட்ட சித்தித்தீர்த்தத்துள் உயர்வெய்தும்.

நாற்பயன் உதவுந் தீர்த்தம் நான்குடை இனைய தீர்த்தம்
ஏற்புறத் திங்கள் தோறுஞ் சிறந்ததே எனினும் சால
மேற்படும் இடபம் கும்பம் விருச்சிகம் கடகந் தன்னில்
பாற்படும் அவற்றின் மேலாம் கார்த்திகைப் பானு வாரம்.   20