வஞ்சிக் கப்படு தானவர் வாரியின் விஞ்சத் தீஞ்சுதை வேறு கடைந்தெய்தத் தஞ்சத் தற்பெயர்ப் பான் அகழ் தன்மையி னஞ்சப் புற்றங் ககழ்வ குடாவடி. 4 | ஏமாற்றப்பட்ட அசுரர் திருப்பாற் கடலினின்றும் இனிய அமுதை வேறாகக் கடைந்து மிகப் பெறற் பொருட்டுத் தன்னை (மந்தர மலை) எளிதாகப் பெயர்க்கும் இயல்பில் யாவரும் அஞ்சும்படி கரடிகள் புற்றினை அகழ்வன. துன்னு தானவர் சூழுஞ் செயலறிந் தன்ன குன்றம் பெயர்ப்பரி தாகமா மன்னு மார்பினன் பள்ளிகொள் மாட்சியின் மின்னு நீ்ல்முகில் மீமிசைத் துஞ்சுமால். 5 | தொகையாகச் செறிகின்ற அசுரர் ஆராய்ந்து சுற்றிப் பெயர்க்கும் செயலைத் திருமகளுறைகின்ற மார்பினனாகிய திருமால் அறிந்து அம்மலையைப் பெயர்க்க இயலாதபடி கண்வளர்கின்ற தோற்றம்போல் மின்னுமிழும் கரியமேகம் அதன் மேற்றவழும். திரிபு செல்லி யங்குழல் வண்டிமிர் தேக்கடி வல்லி யங்குழ வாட்கண் படுப்புவ அல்லி யங்குழ லார்வெறி யாடிய பல்லி யங்குழ லாற்பனித் தஞ்சுமால். 6 | மேகங்கள் தவழாநின்ற (உன்னதத்தையும்) சுழன்று திரியா நின்ற வண்டுகள் (தேனுண்டு) இசைபாடும் (பூங்கொத்தையு முடைய) தேக்க மரத்தின்கீழ் புலி தனது குட்டியை ஒள்ளிய கண் துயிலச் செய்யும். அகவி தழால் (ஆகிய மாலையை அணிந்த) அழகிய கூந்தலையுடைய குறமகளிர் வெறியாட் டயரு மிடத்தில் நிகழும் பலவாச்சியங்களி னொலியாலும் வேய்ங்குழ லொலியாலும் நடுக்குற்று அஞ்சும். குழ-இளமை; ஆகு பெயராய்க் குட்டிமேல் நின்றது. ஆல்-அசை. இரண்டடிப் பாடக மடக்கு காம ரம்பு கனற்றம ரம்பரர் காம ரம்பு கனற்றம ரம்பரர் ஏம மல்கி யிருந்துணர் கான்றரு ஏம மல்கி யிருந்துணர் கான்றரும் 7 | காமர் அம்பு கனற்று அமர் அம்பரர்-மன்மத பாணம் உடற்றா நின்ற போரினுக்கு (உடைந்த) தேவர்கள், புகல் காமரம் நல்தமரம்-பாடும் காமரமென்னும் ஓரிசையாகிய நல்ல ஒலியை, பார் ஏமம் அல்கி இருந்து உணர் கான் தரு-அந்நியரான குறவர் மறைவிடத்திற் றங்கியிருந்து கேட்டு இசை விகற்பங்களை ஆராயும் காட்டின் கண்ணுள்ள |