மரங்களினது, ஏமம் மல்கி இருமை துணர்கான தரும்-பொன்னொளி நிறைந்து விளங்காநின்ற பெரிய பூங்கொத்துக்கள் வாசனையை வீசும். மன்மத பாணம் உடற்றாநின்ற போரினுக்கு (உடைந்த) கின்னரர்கள் பாடுங் காமரமென்னும் (ஓரிசையாகிய) நல்ல ஒலியை அந்நியரான மலை வாழ்நர் மறைவிடத்திற் றங்கியிருந்து (கேட்டு இசைவி கற்பங்களை) ஆராயும் நாட்டின் கண்ணுள்ள மரங்களினது பொன்னொளி போல நிறைந்து விளங்கா நின்ற பெரிய பூங்கொத்துக்கள் வாசனையை வீசும். அம்மலையிலுள்ள குறவரும் பண்விகற்பங்களுணர்ந்தோர் என்பார், உணரென்றார். காமர், உயர்வின்கண் வந்த பால்வழுவமைதி. வண்ட லம்படர் மாவரை யாரமை வண்ட லம்படர் மாவரை யாரமை பிண்டி யைவன நாறிய வில்லமுன் பிண்டி யைவன நாறிய வில்லமும் 8 | வண்மை தலம் படர் மா வரையார்-வளவிய இடங்களிற் செல்லும் கரிய மலையின் கண்ணுள்ள குறவர், அமை பிண்டி ஐவனம் நாறிய இல்லம் முன்- செய்தமைத்த தினை மாவும் மலை நெல்லும் பொருந்திய குடிசைகளின் முன்னர், பிண்டி ஐ வனம் நாறிய வில்லம் உம்-அசோகும் அழகிய சுனை நீரும் மணம் வீசாநின்ற வில்வ மரமும், வண்டு அலம்பு அடர் மா அரை ஆர் அமை-வண்டுகள் இசை பாடா நின்ற நெருங்கிய மாமரமும் தூரை யுடைய ஆத்தியும் மூங்கிலும் உள்ளன. நான்கா மடியில் உடம்படு மெய்யாகக் கொண்டு இல்லம் தேற்றாமர மெனினும் அமையும். விரிந்தும் தொக்கும் நின்ற உம்மைகள் எண்ணுப் பொருளில் வந்தன. வான ரம்பைய ராவிற் பயந்துதாய் வான ரம்பைய ராவிற் பயந்தரத் தானி ரப்பவி யக்கணத் துண்டிசை தானி ரப்பவி யக்கணந் துஞ்சுமே. 9 | வானரம் பை அராவின் பயந்து வான் தாய்-குரங்கானது படத்தை யுடைய பாம்பிற்குப் பயந்து ஆகாயத்தில் தாவி, அரம்பையர் ஆவில் பயம் தர-அங்ஙனம் வசிக்கும் தெய்வமகளிர் காமதேனுவின் ஒளிபொருந்திய பாலைக் கறந்தூட்ட, தான் நிரப்பு அவிய கணத்து உண்டு அக்குரங்கு தான் (பசி என்னும்) வறுமை கெடக் கணப்போதினுண்டு, தால் இசை நிரப்ப வியம் அம் கண் துஞ்சும்-அம்மகளிர் நாவாலிசையைப் பாட (தாலாட்டுப் பாடல் செய்ய என்றபடி) பெருமையாகிய அழகிய கண் துயிலும். ஏ-ஈற்றசை. அராவின்-உருபு மயக்கம். |