284காஞ்சிப் புராணம்


சித்திர கவி

முரச பந்தம்

வஞ்சி விருத்தம்

தான மாந்தரு மஞ்சரி
வான மாந்தரு மஞ்சரி
தான மாந்தரு மஞ்சரி
வான மாந்தரு மஞ்சரி.                        10

     ஒவ்வோரடி ஒவ்வொரு வரியாக நான்கடியும் எழுதி, மேலிரண்டு
வரியும் தம்முட் கோமூத்திரியாகவும் கீழிரண்டு வரியும் தம்முட் கோமூத்திரி
யாகவும் சிறுவார் போக்கப்பட்டும், மேல்வரி இரண்டாம் வரியினும் மூன்றாம்
வரியினும் நான்காம் வரியினும் கீழுற்று மீண்டு மேல் நோக்கவும், கீழ்
வரியினும் அவ்வாறே மேலுற்று மீண்டு கீழ் நோக்கவும் பெருவார்
போக்கப்பட்டும் இந்த வார் நான்கும் நான்கு வரியாக வருவது.

     தானம் ஆம் தருமம் சரி-சோடச தானமும் உண்டாகிய
முப்பத்திரண்டறங்களும் (உலகத்தில்) சஞ்சரிக்க, வானம் ஆம் தரும்
அம் சரிமேகங்கள் நீரைப் பொழியா நின்ற அழகிய அம்மலையின்
பக்கத்தில், தானம் மாந்தரு மஞ்சரி-யானையின் மத சலங்களும்
மாமரங்களின் பூங்கொத்துக்களும், வானம் மாந்தர் உம் அஞ்சு அரி-
விண்ணுலகத்திலுள்ளோரும் மண்ணுலகத்திலுள்ளோரும் அஞ்சாநின்ற
சிங்கங்களுமுள்ளன.

     சரி என்னும் முதனிலைத் தனி வினை வினை எச்சப் பொருளில்
வந்தது. தானம், மாந்தரு, மஞ்சரி, அரி இவை விழுதி பெறாது வந்த சாதி
யொருமை. வானம் இடவாகு பெயர். தொக்கும், விரிந்தும் வந்த உம்மைகள்
எண்ணுப் பொருளில் வந்தன.

தகர விகற்பத்தான் வந்த மடக்கு

கலி விருத்தம்

தத்தை தித்தித்த தோதிதை தாதுதேத்
தொத்து தித்துத் திதித்ததத் தித்துதூத்
துத்தித் தேதத்த தீதுதை தீத்தத்தத்
தொத்த தாது ததைத்துத் துதித்ததே.            11

     தத்தை தித்தித்தது ஓது இதை-கிளிகள் தித்தித்த வசனங்களைப் புகலா
நின்ற புதிய தினைப்புனம், தாது தேம் தொத்து உதித்து திதித்தது-(வேங்கை
மரங்களில்) மகரந்தத்தையுந் தேனையுமுடைய பூங்கொத்துக்கள் அரும்பக்
குறமகளிர் காவலுடையதாய், அத்தித்து-யானையின் கொம்புகளும், தூ
துத்தித்து-பாம்பினது புனிதமான தலையின் கண்ணுள்ள ரத்னங்களும்,
ஏதத்த தீது உதை தீதத்து அத்து ஒத்த தாது துன்பப் பகுதியவான
தீங்குகளை ஓட்டா நின்ற நெருப்பிற் சுடப் படுதலால் (மாற்றுயர்ந்து)
சிவந்த நிறம் பொருந்திய பொற்கட்டிகளும், ததைத்து துதித்தது-நெருங்கப்
பெறுதலால் (யாவரும்) புகழுந் தன்மையை யுடையது.