288காஞ்சிப் புராணம்


     ஆம்பல் நீள் மருப்பு ஆரம் உம்-யானையினது நீண்ட கொம்பிற்
பிறந்த முத்தமும், மாசு அறு காம்பு மாண உகும் கதிர் முத்தம் உம்-
குற்றமற்ற மூங்கில்கள் மாட்சிமைப் படச் சிந்திய கிரணங்களையுடைய
முத்தமும், பூ பசுமை பொழில் நீடும் புரை இருள் ஒப்பு-பூக்களையுடைய
பசிய சோலையின் கண் நீடிய பெரிய இருளை யோட்டி, முட்டாது பப்பு
ஒளி மேவும்-குறைபாடில்லாமல் பரவிய ஒளியை வீசும்.

     முத்தங்களினொளி சந்திர கிரணம் போலக் குறைபாடின்றி இருளை
யோட்டு மென்பது கருத்து.

செம்பொ னன்சுனை சேர்முகை நீலமா
வம்பு நீடு மருங்களி யாரவிள்
கொம்புப் பூமலி பொன்னவிர் குன்றத்தூர்
பம்பு சேணதி பாமருட் டாருமே.               18

     செம்பொன் நன்மை சுனை சேர் முகை நீலம் மா வம்பு நீடு மருங்கு
அளி-சிவந்த பொன்னாலாகிய நல்ல சுனையிற் பொருந்திய முகைத்த
நீலோற்பலங்களின் பெருமை பொருந்திய வாசனை நீடிய பக்கங்களில்
(சஞ்சரிக்கும்) வண்டுகள், ஆர விள் கொம்புப் பூ மலி பொன் அவிர்
குன்றத்து ஊர் பம்புசேண் நதி-மிகவும் மலர்ந்த கோட்டுப் பூக்கள் நிறைந்த
பொற் கட்டிகள் விளங்கா நின்ற அம்மலையின்கண் தவழாநின்ற நெருங்கிய
ஆகாய கங்கையில், பா மருட்டு ஆரும்-பாய்ந்து ஆகாய கங்கையைச்
சுனைநீரென்றே மயங்குதலைப் பொருந்தும்.

     பா என்னும் முதனிலைத் தனி வினை வினையெச்சப் பொருளில்
வந்தது. மருட்டு, தொழிற்பெயர்.

சுழி குளம்

வஞ்சித் துறை

மதிபகவே யான்ற
தினைமனிமா வாவன்
பமர் துறுசே வாயா
கனிதுவன்று மாவே.                         19

     ஒரு செய்யுள் எவ்வெட்டெழுத்தாக நான்கு வரி எழுதப்பட்டு,
மேனின்று கீழிழிந்தும் கீழ் நின்று மேலேறியும் புறநின்று வந்து உள்முடிய
அவ்வரி நான்குமேயாகி அச்செய்யுளே வருவது.

     மதி பகவேய் ஆன்ற தினை மனி-சந்திரனுடல் பிளவு பட (உயர்ந்த)
மூங்கில்க ளமைந்த தினைப்புனத்திற் சென்று, மா ஆ அன்பு அமர் துறுசே
ஆயா-பெரிய பசுக்களுடன் அன்பு பொருந்திய நெருங்கிய இடபங்கள்
(அப்புனத்திலுள்ள தினைக் கதிர்களை மேய்ந்து) (உடல் வாடா, மா கனி
துவன்றும்-(அம்மலையிலுள்ள) மாமரங்கள் (எப்போதும்) கனிகளால் நெருங்கி
நிற்கும்.

     மனி, னகரம் தொகுத்தல் விகாரம்.