சுரகரேசப் படலம் 289


சருப்பதோபத்திரம்

கலி விருத்தம்

வீயா வாமா மாவா யாவீ
யாவா யாரா ராயா வாயா
வாயா டேமா மாடே யாவா
மாரா மாதோ தோமா ராமா.                  20

     நிரையாக அறுபத்து நான்கறை கீறி, எவ்வெட்டெழுத்தால்
ஒவ்வோரடியாகத் தொடுத்த நான்கடியும் மேனின்று கீழிழியவும் கீழ் நின்று
மேலேறவும் எழுதப்பட்டு, மேனின்று கீழிழியவும் கீழ் நின்று மேலேறவும்,
முதல் தொடங்கி யிறுதியாகவும் இறுதி தொடங்கி முதலாகவும், மாலை
மாற்றாக நான்கு முகத்திலும் வாசித்தாலும் அச்செய்யுளே வருவது
சருப்பதோபத்திரம்.

     ஆமா வீயாவாம்-(அம்மலையிலிருக்கும்) காட்டுப் பசுக்கள் (எந்நாளும்)
இறவாவாம், வாயா வீ ஆ ஆராயா வாயார் ஆயா-கிடைத்தற் கரிய
பூக்களைப் பசுக்களாராய்ந்து வாய் நிரம்பக் குதட்டிப் புசித்து (உடல்)
வாடாவாம், வாய் ஆடு மா மாடு ஏயா-பொருந்திய வரை யாடுகள் (தமக்குக்
குறைவின்மையின்) பெரிய (அம்மலைப்) பக்கங்களிலுள்ள வேறிடத்திற்
செல்லாவாம், ஆம் ஆர் ஆம்-அருவி நீரும் ஆத்தி மரமும் எங்கு
முளவாம், மாது மா தோம் ஆரா-அழகிய மாமரங்கள் (குறைவின்றி
நிற்றலின்) குற்றத்தைப் பொருந்தா.

     ஏகாரம் தேற்றப் பொருளிலும் ஓகாரம் அசை நிலைப் பொருளிலும்
வந்தன. அம்மலை தெய்வத் தன்மையுளதாதலின், அங்கிருக்குங் காட்டுப்
பசுக்கள் வீயா என்றார். தெய்வ மணமும் வாடாமையு முளதாதலின்,
கிடைத்தற் கரிய மலர் பருவ காலமன்றி எந்நாளும் பூத்துக் காய்த்துப்
பழுத்து நிற்றலின், அவை இன்மை யென்னுங் குற்றங்கள் கண்டோர்
சொல்லப் பொருந்தா என்பார் மா தோம் ஆரா என்றார். வாயார் என்பது
வினையெச்சப் பொருள் தந்தது.

மாலை மாற்று

தேடா வாழை மாவீ டாதே
தேனா ராமா வாழா யாதே
தேயா ழாவா மாரா னாதே
தேடா வீமா ழைவா டாதே.                    21

     ஒரு செய்யுளை ஈறு முதலாகக் கொண்ட வாசிப்பினும் அச் செய்யுளே
வருவது மாலை மாற்று.

     தேன் தா வாழை மா வீடாது-வானத்திலுள்ள விருச்சிக ராசியைத்
தோயாநின்ற (உன்னதத்தையுடைய) வாழை மரங்களும் மாமரங்களும்
(எந்நாளும்) கெடாமல் நிற்கும், தேன் ஆர் ஆமா வாழ் ஆயாது-
(சோலையிலுள்ள மலர்கள் ஒழுக்கும்) தேனைப் புசித்துச் (சஞ்சரிக்கும்)