| 		காட்டுப் பசுக்கள் தம் வாழ்விற் கெடாது நிலைபெறும், தேயாழ் ஆ ஆம்- தெய்வத் தன்மையுடைய மிதுன ராசியைத் (தீண்டா நின்ற உயர்ச்சியையுடைய)
 ஆச்சா மரங்கள் பல்கி நிற்கும், ஆர் ஆனாது-ஆத்தி மரங்கள் நீங்காது
 நிலைபெறும், தேடா வீ மாழை வாடாது-எளிதிற் கிடைக்கும் மலர்களை
 யுடைய புளிமா மரங்களும் உலராது நிற்கும்.
      ஏகாரம் நான்கும் ஈற்றசை. அம்மலை தெய்வத்தன்மையும், கயிலை    முதலியவற்றோ டொன்றாகச் சேர்த் தெண்ணப்படு மான்மியமு முளதாதலின்,
 அங்கிருக்கும் மரங்களும் மிருகங்களும் கெடா என்பார், ‘வாழை மாமாழை
 வீடா’ தென்றும், ‘ஆமா வாழாயா’ என்றும் கூறினார்.
 காதை கரப்பு	 கலி விருத்தம்	 		| இனநீடிய யானைவி லாரு லாவ வனமோடிட மாதவி யாரு நாவி
 புனமோடிகை யாதவி லாருண் மன்னி
 யனல்வாயவி யாருவ கன்றி மாதோ.             22
 |       ஒரு செய்யுள் முடிய எழுதப்பட்டு, அதன் ஈற்று மொழியின்    முதலெழுத்துத் தொடங்கி ஒவ்வோரெழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு
 செய்யுள் போதுவது காதை கரப்பு.
      வில்லார் உலாவ நீடிய யானை இனம் வனம் ஓடிட-வில்லையுடைய    குறவர்கள் உலாவுதலைக் கண்டு அச்சமுற்ற யானையின் கூட்டங்கள் காட்டில்
 விரைந்தோடும் அரவத்தைக் கேட்ட, மாதவி ஆரும் நாவி-குருக்கத்தி
 மரங்களின் (மறைந்து) தங்கிய கத்தூரி மிருகம், புனம் ஓடி நையாத வில்லார்
 உள் மன்னி-தினைப்புனத்தின்கட் பயந்தோடிக் (குறை வின்மையின்)
 வருந்துதலில்லாத குறவர் குடிசையுட் சேர்ந்து, அனல்வாய் கன்றி அவி
 ஆருவ-(அக்குடிசையிலுள்ள) நெருப்பிற் பட்டுவாடி (அக்குறவர்கட்கு)
 உணவாகப் பொருந்தும்.
      வாய் என்னும் முதனிலை, வினையெச்சப் பொருளில் வந்தது.	 காதைகரப்பிற் கரந்தது	 வஞ்சித் துறை	 		| கருவி வானனி மருவி யாடின
 விருவி மாடின
 வருவி யாடின           23
 |       கருவி வான் நனி ஆடின அருவி-உலகத்திற்குத் துணைக்காரணமாகிய    மேகங்கள் மிகவும் பொழியாநின்ற நீராலாய (அம்மலையினின்று விழும்)
 அருவியின் நீர்ப்பெருக்கில், மாடு இருவி இனம் மருவி ஆடின-பக்கத்திலுள்ள
 தினைத்தாட் கூட்டங்கள் பொருந்தி மூழ்கா நிற்கும்.
 |