292காஞ்சிப் புராணம்


தனிவா னளவுங்
குனிமாந் தருவின்
நனிமாந் தர்விழை
கனிவீழ்ந் தழியும்.                            3

     ஒப்பற்ற வானத்தை அளாவிய, கனிகளால் வளைந்த மாமரங்களினது
மனிதர்கள் மிக விரும்புங் கனிகள் வீழ்ந்து அழியும்.

பிறிது படுபாட்டு

கலி விருத்தம்

ஆன்றார்ந்த காவி னளியாடு பூந்தேன்
மான்றீன்ற வேரன் மணியீர்ங்க வுண்மாச்
சான்றோங்கு காட்டிற் றயங்குமணி முத்தோ
டேன் றூர்ந்து நாட்டி னடக்கவெழு மார்த்து.      25
 
ஆன்றார்ந்த காவி னளியாடு பூந்தேன்மான்
றீன்றவே ரன்மணி யீர்ங்கவுண்மாச்-சான்றோங்கு
காட்டிற் றயங்கு மணிமுத்தோ டேன் றூர்ந்து
நாட்டி னடக்கவெழு மார்த்து.

     ஒரு செய்யுள் அடியையுந் தொடையையும் வேறு படுப்பச் சொல்லும்
பொருளும் வேறு படாது வேறொரு செய்யுளாய் வருவது பிறிதுபடு பாட்டு.

     ஆன்று ஆர்ந்த காவின் அளி ஆடு பூ தேன்-பெருமை அமைந்து
நிறைந்த சோலையிலுள்ள வண்டுகள் குடைந்தாடா நின்ற பூவினின்றொழுகுந்
தேன் பெருக்கானது, மான்று வேரல் ஈன்ற மணி-ஒன்றோடொன்று
பின்னிக்கொண்டிரா நின்ற மூங்கிற்கணுக்கள் பெற்ற முத்துக்களை, சான்று
ஓங்கு காட்டில் ஈரம் கவுள் மா தயங்கு மணி முத்தோடு ஏன்று ஊர்ந்து-
(மரங்களால்) நிறைந்துயர்ந்த காட்டிற் சஞ்சரியாநின்ற குளிர்ச்சி பொருந்திய
கபோலத்தையுடைய யானையினது (தந்தங்களி னின்றும் உதிர்ந்த) விளங்கா
நின்ற அழகிய முத்துக்களோடு வாரிக்கொண்டு (அந்நில முதலியவற்றில்)
பரந்து, நாட்டின் நடக்க ஆர்த்து எழும்-மருத நிலத்திற் செல்லச் சத்தித்து
எழா நிற்கும்.

எண்சீரடி யாசிரிய விருத்தம்

     இனைய வளம்பல பெற்று நீடி இன்பரும் உம்பரும் ஏத்த
வாய்ந்து, நனைமலர்க் காவு மருங்கு டுத்து நளிர்மழைப் போர்வை
தன் மெய்யிற் போர்த்துக், கனைகதிர்ப் பன்மணிச் சென்னி மேல்வான்
கங்கை தலைச்சுற்று மான ஓங்கிப், புனைபுகழ் மல்க அரசு வைகும்
பொற்பமர் மந்தர வெற்பின் மாதோ.                       26