சுரகரேசப் படலம் 295


     ஆழி யுடைப்புவி மீதொர் சிற்றூர் ஆள்பவர் தம்மை அடுத்த
வரும், தாழ்வரும் இன்ப மகிழ்ச்சி எய்தித் தகைபெற வாழுகின்றார்கள்
என்னில், பாழி உயர்அகி லாண்ட கோடிப் பரப்பு முழுதும் அரசு
செய்யும், மாழை விழிஉமை பாக நின்னை வந்தடுத்தேங்களுக் கென்கு
றையே.                                              33

     கடல்சூழ்ந்த நிலவுலகில் ஓர் சிற்றூரை ஆட்சி செய்பவரை
அணுகினவரும் குறைவில்லாத இன்பத்தையும் மகிழ்ச்சியையும் அடைந்து
சிறப்புற வாழ்கின்றனரெனில் வலிமை மிக்க பல்கோடி அண்டப் பரப்புகள்
முற்றவும் திருவருட் செங்கோல் செலுத்தும் மாவடு வகிரனைய கண்ணி
பங்கனே! நின்பால் அடைக்கலம் புகுந்தேமாகிய எங்களுக்குக் குறை
யாதுளது?

     துறந்தவர் உள்ளக் கமல மேவுஞ் சோதித் திருவுரு போற்றி
போற்றி, மறந்திகழ் வோரை எறிந்து வீசும் மறந்திகழ் வாட்படை
யாளி போற்றி, உறந்த மலர்ப்பதம் போற்றி யாங்கள் உன்றன்
அடைக்கலங் கண்டு கொள்ளென், றறந்தலை நின்ற அமரர் போற்ற
அங்கணன் நோக்கி அருள்சு ரந்து.                        34

     நின்னையே பற்றிப் பிறவற்றைக் கைவிட்டவர் மனத்தாமரை மலரில்
வீற்றிருக்கும் பேரொளி வடிவினனே போற்றி! போற்றி! மாறுபாடுடையவரைச்
செகுக்கும் வீரம் விளங்குகின்ற ஒளியுடைப் படைகளை ஆள்பவனே போற்றி!
நுணுகிய மென்மலரை யொக்கும் திருவடிகளுக்கு வணக்கம். அடியேங்கள்
உன்னுடைய அடைக்கலம் கண்டு கொள்ளாய் என்று தருமத்தின் தலைநின்ற
திருமால் முதலிய தேவர்கள் துதிக்கச் சிவபெருமான் திருவுள்ளங் கொண்டு
அருள் கூர்ந்து,

     ‘‘உடையாயென்னைக் கண்டு கொள்ளே’’ (திருவா-திருச்சதகம்-1)
என்னும் திருமொழியை எண்ணுக. அறந்தலை நிற்றல்: தலை அசைநிலை;
அறநெறியில் உறுதி பெற நிற்றலுமாம். ‘‘தீத்தொழிலில் தலைநின்ற கொடியர்’’
(கயிலாயப் படலம்) எனவும் வருதல் காண்க.

     வேண்டுவ கூறுமின் நுங்கட் கின்னே மேவர நல்குதும் என்றருள,
ஈண்டிய மாயனை உள்ளிட் டோர்தம் ஏவலின் நான்முகன் ஏத்தி
எந்தாய், மாண்ட மலைமகள் பாற்க ருப்பம் வாய்ப்பது வேண்டிலர்
மால்மு தலோர், காண்டக வந்தனர் மேல்இ யற்றுங் கடன்அறி
யேங்கள் எனக்க ரைந்தான்.                              35

     ‘வேண்டுவனவற்றைக் கூறுமின் அவற்றை உங்கட்கு இப்பொழுதே
பொருந்துமாறு அருள் செய்வேம்’ என்று திருவாய் மலரக், கூடியிருந்த
திருமாலை உள்ளிட்ட தேவர்களுடைய ஏவலினால் பிரமன் துதி செய்து
‘‘எந்தையே! மாட்சிமையுடைய இமய வல்லியினிடத்துக் கருப்பம் வாய்த்தலை
மால் முதலானோர் விரும்புகிலர் ஆதலின் தேவரீரைக் காணுமாறு
வந்துள்ளனர். இனி மேற்செய்யத் தக்க கடமையை அறியேமாகின்றேம்’’
எனக் கூறினான்.