| 		| காண்டலும் உவகை பொங்கிச் செயத்தகு கடன்கள் முற்றித் தீண்டினோர் பிறவி மாய்க்குஞ் சுரகர தீர்த்தம் அடி
 மாண்டரு சுரக ரேச வள்ளலை அருச்சித் தேத்தி
 வேண்டினர் வேண்ட லோடும் வெப்புநோய் ஒழியப் பெற்றார்.  42
 |       கண்டளவே மகிழ்ச்சி மீக்கூர்ந்து செய்யத்தக்க கடன்களை விதிவழி    முற்றச் செய்து தீண்டினோர்க்கும் பிறவி நோயைப் போக்கும் சுரகர
 தீர்த்தத்தில் படிந்து மாட்சிமையைத் தருகின்ற சுரகரேச வள்ளற் பெருமானை
 அருச்சனை புரிந்து தொழுது துதித்துக் குறையிரந்தனர். அவ்வளவிலே
 சுரநோய் நீங்கப்பெற்றனர்.
 		| பெற்றபின் அங்கண் நீங்கிப் பெறலரு மேருக் குன்றின் உற்றமாத் திரையின் அன்னோர் வயாவுநோய் ஒழிவு பெற்றார்
 மற்றவர் அகட்டின் நீங்கி வளங்கெழு சுடர்பொற் சோதி
 பற்றிளம் பரிதி நூறா யிரமெனப் பரந்து தோன்றி.        43
 |       சுரநோய் நீங்கிய பின்னர் அடைதற்கரிய மேரு மலையை நெருங்கிய     அளவிலே தேவர் யாவரும் கருப்ப வேதனை தவிர்ந்தனர். அவர் தம்
 வயிற்றினின்று நீங்கிச் சுடர் விடும் பொன்னொளி இளஞ் சூரியர் ஓரிலக்க
 மென்ன ஓரொளி பரவித் தோன்றி,
      வயா-வேட்கைப் பெருக்கம்.	 		| வடவரை முழுதுஞ் செம்பொன் வண்ணமாச்செய்து தெண்ணீர்த் தடநெடுங் கங்கை யாற்றாற் சரவணப் பொய்கை மேவிக்
 கடவுளர் முனிவர் எல்லாம் உய்யுமா கருணை காட்டிச்
 சுடர்வடி நெடுவேல் அண்ணல் அறுமுகன் தோன்றி னானால்.	44
 |       மேரு மலை முழுதினையும் செம்பொன் நிறத்துத் தன் வயமாக்கித்    தெளிந்த நீர்ப் பரப்பினையுடைய கங்கையாற்றின் வழியே சரவணப்
 பொய்கையில் வீற்றிருந்து தேவரும் முனிவரும் யாவரும் பிழைக்குமாறு
 அருள் பாலித்துச் சுடர் வடி நெடுவேல் அண்ணலாகிய ஆறுமுகப்
 பெருமான் தோன்றி யருளினார்.
 		| சுரந்தவிர்த் தமரர்க் காத்த சுரகர தீர்த்தம் ஆடி வரந்தருஞ் சுரக ரேச வள்ளலை வணங்கிப் போற்றி
 நிரந்தரம் அன்பு செய்யப் பெற்றவர் நெடுநீர் ஞாலத்
 தரந்தைநோய் தவிர்ந்து முத்திப் பேற்றினை அடைவர் மாதோ.	45
 |       சுரநோயைத் தவிர்த்துத் தேவரைக் காத்த சுரகர தீர்த்தத்தில் படிந்து     வரங்களை ஈந்தருளும் சுரகரேச வள்ளலைத் தொழுது போற்றி இடையறாத
 பேரன்பினைச் செய்தவர் கடல்சூழ் புவியில் துன்பந்தரும் நோய்கள் நீங்கி
 முத்திப் பேற்றினையும் எய்துவர்.
 சுரகரேசப் படலம் முற்றிற்று.	     ஆகத் திருவிருத்தம்-956	 |