| செய்து செறிவு கொள்ளும் புனல் முற்றவும் அகன்ற வயல்களில் தேக்குவர் உழவர். ‘சென்ற இடத்தால் செலவிடா (து) தீது ஒரீஇ நன்றில்பால் உய்ப்ப தறிவு அகப்பகையை அஞ்சிக் காப்பவரைப் பிறன்மனை நோக்காத ‘பேராண்மை’யர் என்றாற் போலப் ‘பேராளர்’ என்றருளினர். ‘பிறன்மனை அன்னையில் தீரா நன்னர் ஆண்மை’ என ஞானாமிர்தத்தினும் காண்க. ஆள்-போர் வீரன். பேராளர்-பெருவீரர். ‘ஒருநெறிய மனம்’ (திருஞா- 1-11) எனுந் திருவாக்குக் காண்க. பழியில் நீங்கிநன் கீட்டிய பசும்பொருள் சிறிதும் கழிப டாதுநல் வழிப்பயன் படுவது கடுப்பக் கொழிதி ரைச்சுவைப் பாலியின் குளிர்புனல் முழுதும் வழுவு றாதுகால் வழிச்சென்று வளவயல் நிறைக்கும். 70 | நூலோர் விலக்கியன ஒழிந்து, விதித்தன செய்து நன்கு தொகுத்த பெரும் பொருள் சிறிதும் வீண்போகாது அறவழியில் பயன் படலை ஒப்ப, நீர் சிறிதும் மடையுடைத்து வெளியேறாது முழுதும் கால் வாயிற் சென்று வளம் நிறைக்கும் வயல்களை நிறைக்கும். பசும்பொருள்-சிந்தையில் இரக்கம் வைத்துத் தேடிய பொருள். கண்ண கன்புவி முழுதுமாங் கடுங்கொலை அவுணன் அண்ணல் மார்பகம் பிளப்பவர் போலவிர் மணியின் வண்ண வன்கடா நிரைநிரை யாத்துவன் படையாற் பண்ணை தோறுநின் றுழுநர்கம் பலைகளே யெங்கும். 71 | இடமகன்ற நிலவுலக முற்றுமாய்க் கொடிய கொலைத் தொழிலை மேற்கொண்ட அவுணனது மார்பைப் பிளப்பவர்போல நீலமணிபோலும் நிறத்தனவாகிய வலிய கடாக்களை ஏரிற் பூட்டி வயல்களை வரிசை வரிசையாக உழுவோர் ஆரவார ஒலி எங்கணும் உள்ளன. மருவு சால்தொறும் வெருவிமுன் குதித்தெழு வாளை இரும ருப்பிடை உதைந்துழும் எருமையைத் தடுக்கும் பருவ ராற்குலம் ஒய்யெனப் பாய்ந்தெழுந் தலைக்கும் உருவ வாற்புறத் துதைந்துவல் விரைந்தெழ உந்தும். 72 | படைச்சால் தொறும் அஞ்சித் துள்ளி எழுந்த வாளை மீன்கள் உழாநின்ற கடாக்களின் இருகொம்பிடை உதைத்து வீழ்ந்து உழவைத் தடைப் படுத்தும். பருவத்தவரால் மீன்கள் விரையத் தாவி எழுந்து அசைக்கும் வால்புறத்துத் தாக்கி மிக விரைந்து செலத் தூண்டும், பூண்ட வன்கொடுந் தானவன் ஆக்கைபோழ்ந் திடலுங் காண்ட கும்புவி தன்நிறங் காட்டிய தென்னக் கீண்ட சால்தொறுங் கேழ்கிளர் தமனியங் கிடந்து மாண்ட பேரொளி வயங்கிநீள் கனையிருள் மேயும். 73 | |