306காஞ்சிப் புராணம்


     தேவர்களை அணுகித்துரும்பை அவர்தம் முன் நாட்டிச் செம்மாந்து
வீற்றிருக்கும் இயக்க வடிவினனைப் பாஞ்ச சன்னியத்தை ஏந்திய திருமாலாதி
தேவர்கள் நோக்கி, ‘இவ்விடத்தில் நீசெய்கின்ற ஈது என்னை? அச்சம் இன்றி
இருக்கும் தனியனாகிய நீ யாவன் சொல்’லென்று வினவும் மொழியைக்
கேட்டு மெய்யுணர்வின் மிக்க தவத்தினையுடையோர் கண்டு கொள்ளும்
அப்பெருமானார் இவ்வாறு அருள் செய்வர்.

     தருக்குடைய இவர்கள் காணற், குரியரல்லரென்பார் ‘உணர்விற் சிறந்த
தவர்கண்டு கொள்ளும் உவன்’ என்றனர். துணிபு, ஈண்டு அச்சத்தின்
நீங்குதல்.

     எவனேனு மாக வரும்நான் நுமாது வலிஇன் றளக்க லுறுவேன்,
துவளாது நம்முன் நடும்இத் துரும்பு துணிசெய்ய வல்லன் எவனோ,
அவனே தயித்தி யரைவென்ற மீளி அறிகென் றுரைப்ப மகவான்,
இவரா எழுந்து குலிசத்தை வீசி வறிதே இளைத்த னனரோ.      11

     ‘யான், யாவனாயினும் ஆக; நுமக்கு அதனால் வருவது எவன்? உங்கள்
வலிமையை இப்பொழுது அளந்து காணப் புகுவேன். நமக்கு முன்னர் 
அசையாது நடப்படும் இத்துரும்பினைக் கூறு படுத்த வல்லன் யாவனோ
அவனே அசுரரை வென்ற வீரன் என்றறியுங்கோள்’ என வாய் மலர
இந்திரன் குதித்தெழுந்து வச்சிராயுதத்தை வீசி வீணே மெலிந்தனன்.

     மற்றைத் திசைக்கண் உறைவோரும் வன்மை முழுதுஞ் செலுத்தி
வலியில், ஒற்றைத் துரும்பை அசைவிக்கும் ஆற்றல் இலராய் உடைந்து
விடலும், செற்றத் தெழுந்த அயனார் தமாது படையைச் செலுத்த
அரியும், அற்றப் படாத படைவீசி ஆர்ப்ப அவைகூர் மழுங்கி
யனவே.                                              12

     ஏனைய திசைகளில் உறைகின்ற அக்கினி, இயமன் முதலானோரும்
தங்கள் ஆற்றலை முற்றவும் செலுத்தியும் வன்மையற்ற ஓர் துரும்பை
அசையச் செய்யும் வலி இலராய்த் தோல்வியை அடைதலும், சினத்துடன்
எழுந்து பிரமன் தனது படையாகிய பிரமாஸ்திரத்தை ஏவவும், திருமாலும்
தனது வெற்றி வாய்ந்த சக்கரப்படையை வீசி ஆரவாரிப்பவும் அவர் தம்
படைகளும், கூர் மழுங்கி அத்தன்மைய ஆயின.

இறைவி தோன்றி இமையவர்க்குப் புத்தி புகட்டல்

     துரும்பொன்று தன்னில் வலிமுற் றிழந்த சுரர்அச்சம்
எய்திவியவா, இரும்பண்பு கூர எவன்நீ? இயம்பு கெனலும் இயக்க
வடிவாய், வரும்பாண்ட ரங்கன் உருவம் கரப்ப மறுகித் திகைக்கும்
அவர்முன், கரும்பொன்று தோளி மலையான் மடந்தை எதிர்காட்சி
தந்தருளினான்.                                          13