|     திருமேற்றளிப் படலம்	 கலி நிலைத்துறை	 		| துளிம துத்தொடைக் கடவுளர் தொழும்அம ரேசம் களிவ ரப்புகன் றனம்உருத் திரகண முதலோர்
 அளியி னால்தொழு தேத்தும்ஈ ரைம்பதிற் றொன்பான்
 தளிகள் ஈண்டெடுத் தியம்புதும் வழுத்தபு நெறியீர்.  1
 |       குற்றங்களைக் கெடுத்தருளிய செவ்விய நெறி நிற்பிர்! தேனைத்    துளிக்கின்ற மாலையை அணிந்த தேவர் தொழும் அமரேசம் மகிழ்ச்சி
 மீதூரக் கூறினோம். உருத்திர கண முதல்வர் அன்பால் தொழுது துதிக்கும்
 நூற்றுப் பதினெட்டுத் திருக்கோயில்கள் இவண் எடுத்துக் கூறுவோம்.
 		| சேகு தீர்அம ரேசத்தின் சேயிடைத் தென்பால் மாக வைப்பினை உரிஞ்சிய மணிமதிற் காயா
 ரோக ணக்குட பாங்கர்நூற் றுப்பதி னெட்டு
 நாகர் போற்றிட நலங்கெழு தலங்கள்நன் குளவால்.   	2
 |       குற்றத்தைப் போக்குகின்ற அமரேசத் தலத்திற்குத் தென் திசைச்    சேணிடை விண் தலத்தினைத் தீண்டுகின்ற அழகிய மதில் சூழ்ந்த காயா
 ரோகணத்திற்கு மேற்கில் உருத்திரர் நூற்றுப்பதினெண்மர் போற்றிட நன்மை
 கெழுமிய தலங்கள் சிறக்க உள்ளன.
 		| அண்டங் காத்தமர் உருத்திரர் நூற்றுவர் அருட்சீ கண்டன் வீரன்கு ரோதனே முதல்கரு தெண்மர்
 மண்ட லத்திறை யோர்இரு நால்வரும் வழுத்திப்
 பண்டு பூசனை புரிந்திடப் பட்டஅத் தளிகள்.        3
 |       அண்டத்தைக் காவல் பூண்டு விளங்குகின்ற உருத்திரர் நூற்றுவரும்,    அருளொடு கூடிய சீ கண்ட ருத்திரர் வீரபத்திரர் ஆகியோரும், குரோதர்
 முதலிய எண்மரும், மண்டலத் தலைவராகும் எண்மரும் துதித்து முன்னம்
 பூசனை இயற்றப்பட்டன ஆகும் அக்கோயில்கள்.
 திருமால் சிவசாரூபம் பெற விரும்பல்	 		| இருமை யுந்தரு மேன்மைஅத் தளிகளை என்றும் பொருவில் மெய்த்தவர் பற்பலர் அருச்சனை புரிவார்
 கருத ரும்புகழ் அவற்றிடைக் கண்டவர் கருநோய்
 ஒருவி வீடுறும் மேற்றளி என்பதொன் றுளதால்.      4
 |  |