| முப்புரத்தவர் ஒழுக்கம்	 		| நிலமீதும் அந்தரத்தும் நெறிதாழ் கூந்தல் அரம்பையர்வாழ் புலமீதும் வெவ்வேறு பொன்னின் வெள்ளி தனில்இரும்பில்
 வலமேவு மாதவத்தான் மயனார் வகுத்த முப்புரிசை
 உலமேவு புயத்தவுணர்க் குளவா யினவால் முன்னாளில்.     2
 |       நிலமீதும், அந்தரத்தினும், நெறித்துத் தாழ்கின்ற குழலையுடைய    அரம்பையர் வாழ்கின்ற துறக்கத்தினும் வெவ்வேறியல்பினை யுடைய
 பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும் ஆற்றல் வாய்ந்த பெருந்
 தவத்தால் அசுரத் தச்சன் இயற்றிய திரிபுரங்கள் திரண்ட கல்லொக்கும்
 தோளினையுடைய அவுணர்க்கு முற்காலத்தில் உள ஆயின.
 		| அங்கவற்றின் உறும்அவுணர் சுருதி மிருதி ஆய்ந்துணர்ந்தோர் துங்கநிலை ஆகமங்கள் முழுதுந் தேர்ந்து துகளில்லோர்
 கங்கையணி சடைப்பெருமான் வழித்தொண் டாற்றுங் கடப்பாட்டோர்
 தங்குதிரு வெண்ணீறு சண்ணித் தொளிகால் வடிவினார்.
 |       அப்புரிசைகளில் வாழும் அசுரர் வேதங்கள் மனு நூல்களாகிய இவற்றை     ஆராய்ந்துணர்ந்தோர்; உயர்ந்த இயல்பினையுடைய ஆகமங்கள் முற்றுந்
 தெளிந்து குற்றமற்றவர்; கங்கையை அணிந்த சடையினையுடைய பெருமான்
 வழி நிற்கும் தொண்டு செய்யும் கடமை யுணர்ச்சியோர்; திருவருள் வாய்ந்த
 வெண்ணீற்றினைப் பூசி ஒளிவீசுகின்ற திருமேனியர்,
 		| சிவலிங்கத் தருச்சனையே செய்யும் நியதிக் கடன்பூண்டார் சிவதருமந் தலைநின்றார் திகழப் பூணுஞ் சாதனத்தார்
 சிவனடியார் தமைக்காணின் உவகை துளும்புஞ் சிந்தையினார்
 சிவநெறியிற் பிறழாத செயலில் தமக்கு நிகரில்லார்.        4
 |       சிவலிங்க பூசனை புரிதலையே வழுவாது கடப்பாடாக மேற்கொண்டவர்;    சிவ புண்ணியத்தில் முதிர்ச்சி பெற்றவர்; விளங்கச் சிவ சின்னம் தாங்கியவர்;
 சிவனடியார் வழிபாட்டில் மகிழ்ச்சி ததும்பும் மனத்தினோர்; சிவ
 நெறியினின்றும் மாறுபடாத செய்கையில் தமக்கு நிகர் தாமே ஆவர்.
 		| எவ்விடத்துஞ் சிவகதையே இயம்பு வோரும் கேட்போரும் எவ்விடத்துஞ் சிவபணியே இயற்று வோரும் மெச்சுநரும்
 எவ்விடத்துஞ் சிவனடியார் எதிர்கொள் விருந்து புறந்தருதல்
 எவ்விடத்துஞ் சிவநாம முழக்க மன்றி இலை அங்கண்.     5
 |       முப்புரத்தில் யாங்கணும் சிவபுராணங்களைப் படிப்போரும்     கேட்போரும் ஆயினர்; எவ்விடத்தும் சிவபிரானுக்குத் திருத்தொண்டு
 புரிவோரும் புகழ்வோரும் ஆயினர்; எவ்விடத்தும் சிவபிரா னடியவரைச்
 சென்றெதிர் கொள்வோரும், விருந்தூட்டுவோரும் ஆயினர்; எவ்விடத்தும்
 சிவபிரான் திருப்பெயரின் முழக்கமன்றி பொருளற்ற ஓசை அவ்விடத்தில்லை.
 |