|      அணுகிப் பெருமான் திருவடிகளைப் பணிந்தெழுந்து துதித்து தாமரை    மலர்போலும் கரங்களைக் குவித்து விழிப்பொடும் உரைப்பான். சங்கினால்
 இயற்றப் பெற்ற குழைக்காதணியினனே! முப்புரத்தில் உறை அசுரர்
 எங்களுக்குத் துன்பம் செய்ய அதனால் இப்பொழுதளவும் வருந்தினம்.
 		| மாயையின் நெறிகாட்டும் புத்தனின் மருளுற்றுத் தூயநன் னெறிவிட்டார் துகள்படும் அவர்தம்மை
 மாய்வுசெய் தெமைஆள்வாய் யாமளை வனிதைமுத
 லாயினர் தமைமுன்னாள் மருள்புரி அடிகேளோ.    18
 |       ‘மயக்குறும் வழியை ஒளிநெறியென உணர்த்தும் புத்தனால் மருண்டு     தூய்மையும் நன்மையும் அமைந்த வழியைக் கைவிட்டார். குற்றப்படும்
 அவரை அழித்து எம்மை ஆட்கொள்வாய், முனிவரர் துணைவியராகிய
 யாமளை முதலானோரை மயக்குறுத்தும் அடிகளே?
     பெருமான் முப்புரம் எரித்தல்	 வஞ்சி விருத்தம்	 		| என்று மாயன் இயம்புசொல் சென்று வார்செவி சேர்தலும்
 மன்று ளாடிய வான்பொருள்
 ஒன்று கூறத லுற்றிடும்.                        19
 |       என்று திருமால் வேண்டிய சொற்கள் நீண்ட திருச்செவியில் சென்று    சேர்ந்த அளவிலே அம்பலத்தாடுகின்ற பரம்பொருள் ஒன்று கூறத்
 தொடங்கும்’.
 		| கருவி மூதெயில் காதுபோர்க் கருவி ஒன்றிலம் காண்வரக்
 கருவி கூடிற் கணத்தவர்
 கருவெ லாமிறல் காண்டியால்.                  20
 |       ‘போர்க்கருவிகள் அமைந்த பெரிய கோட்டைகளை அழிக்கின்ற    போருக்குரிய துணைக்காரணங்கள் ஒன்றனையும் காணும்படி உடையே
 மல்லேம்; அவை கிடைப்பின் ஓர் கணப்பொழுதில் மூலத்தொடும்
 அழிதலைக் காண்பாயாக.’
 		| என்னும் வாய்மொழி எம்பிரான் முன்னர் நந்தி முகத்தினாற்
 சொன்ன காலைத் துழாயனும்
 அன்ன தேவரோ டாய்ந்தனன்.                 21
 |  |