பெருமையுறும் நாரத முனிவனும் புத்தனும் மனக்கவலையுற்று அழி வெய்தி இரங்கித்தேவர் கூறியவற்றைக்கேட்டு ‘என்ன காரியத்தைச் செய்தோம்! புகழ்தற்கரிய சிவபத்தர்களுள் உயர்ந்தவரும் பழைய வேத நூற்கடலை நிலைகண்டுணர்ந்தவரும் ஆகிய அசுரரை வீணே மயக்க அறிவை ஊட்டினோம். ஐயகோ!’ பழியில் வாய்மையர் பலர்தமைத் தீவழிப் படுத்தஇப் பெரும்பாவக் கழிவு வேத நூல் யாங்கணுங் கண்டிலேம் கற்பகோ டியின்மேலும் ஒழிவு றாதெமக் கிருள்நர கினிச்செயல் யாதென உளம் நெக்கார் சுழிபு னற்பணைக் காஞ்சியின் எய்தினர் தொடுபழி வினைமாற. 30 | ‘புகழ்ச்சியை உடைய மெய்ம்மையர் பலரையும் புன்னெறியிற் செலுத்திய இப்பெரும் பாதகம் தீரும்வழி வேதநூலில் யாண்டும் காண்கிலேம்; ‘இருள்’ என்னும் நரகினின்றெழுதல் கற்பகோடி வருடத்தின் மேலும் ஒழிவதன்றே இப்பொழுது செய்வது யாதென மனம் உடைந்தனர். பற்றியுள்ள பழியும் பாவமும் நீங்க மிக்க நீர் சூழ்ந்த வயல்களையுடைய காஞ்சியை அடைந்தனர்.’ கருத்த விர்த்தருள் மழுவலான் புரந்தருள் காஞ்சியிற் புகலோடும் இருப்புக் குன்றுறழ் திண்பெருந் தீவினை எம்பிரான் அருளாலே பருத்திக் குன்றென நொய்மைய தாயது பார்த்தனர் இருவோரும் அருத்திகூர்ந்தனர் அவ்விடம்பருத்திக்குன்றாமெனப் பெயரிட்டார். | பிறவியைத் தவிர்த்து முத்தியை அருள் செய்கின்ற சிவபெருமான் காப்பிற்பட்ட திருக்காஞ்சியிற் புகும் அளவில் இரும்பு மலைபோலுந் திண்ணிய பெரிய தீவினை எமது பெருமான் திருவருளாலே பருத்திப் பொதி போலும் மெலிந்தது. இருவரும் அவ்வேறு பாட்டை அறிந்தனர்; அன்பு மீதூர்ந்தனர். அவ்விடத்திற்குப் ‘பருத்திக் குன்றம்’ எனப் பெயரிட்டார்கள். அவ்வ ரைப்பினில் இருந்துகொண் டிருவரும் அதன்வட கீழ் பாங்கர், எவ்வம் இல்லதோர் விசித்திரக் கோயில்அங் கியற்றினர் அதன்உள்ளால், சைவர் சூழ்கயி லாயநா தன்றனைத் தாபனஞ் செய்தேத்திச், செவ்வன் மாதவம் பன்னெடு நாளுறச் செய்தனர் அதுகாலை. 32 புத்தனும் நாரதரும் அச்சூழலில் தங்கியிருந்து அதற்கு வடகிழக்கில் குற்றமற்ற விசேடம் உடைய சித்திரக் கோயில் எடுத்தனர்; அக்கோயிலுள் சைவர் வலம் வரும் கயிலாய நாதப் பெருமானைத் தாபித்துத் துதிசெய்து மேவிய பெருந்தவம் மிகப் பலகாலம் செய்தனர். |