| 		| இடும்பைநோய் அறுக்குந் தெண்ணீர் எழிற்சிவ கங்கை யாடி நெடும்பணை ஒருமா மூல நின்மலக் கொழுந்தை ஏத்திக்
 கொடும்படைச் சனகன் ஈன்ற கோதையைப் பெறுவான் கூற்றை
 அடும்புகழ்ச் செய்ய தாளை இரந்துநின் றழுது வேண்டி.    4
 |       துன்ப நோயைத் தவிர்க்கும் தெளிந்த நீரினையும் அழகினையும்     உடைய சிவகங்கையில் மூழ்கி நீண்ட கிளைகளையுடைய ஒற்றைமாவடியில்
 வீற்றிருக்கும் விமலரைத் துதித்து தறுகண்மை அமைந்த சேனையையுடைய
 சனகன் ஈன்ற சானகியைப் பெற வேண்டி இயமனை உதைத்த புகழுடைய
 செவ்விய தாளை இரந்து நின்று அழுது வேண்டி,
 		| தாழ்ந்தெழுந் தேகித் தென்பால் அகத்தியேச் சரத்தின் முன்னர் வாழ்ந்திடுந் தகைமை சான்ற வண்டமிழ் முனியைக் கண்டான்
 சூழ்ந்தவெந் துயரத் தோடும் ஓடினன் துணைத்தாள் மீது
 வீழ்ந்தனன் புலம்ப லோடும் வெருவரேல் என்னத் தேற்றி.   5
 |       பணிந்தெழுந்து தென் திசையில் போய் அகத்தியேச்சரத்தின்     முன்னர்ப் பெருந்தகுதி நிரம்பிய வண்டமிழ் முனிவராகிய அகத்தியரைக்
 கண்டனன்; மூடிய கொடுந்துன்பத்தோடும் ஓடினன்; திருவடிகளில் வீழ்ந்து
 அழுதரற்றும்போது ‘அஞ்சாதே!’ என்னத் தேற்றி,
 		| இத்துணை இடும்பைக் கேது எவன்என வினாவுஞ் செல்வ முத்தமிழ் முனிவன் கேட்பப் புகுந்தவா மொழிய லுற்றான்
 மைத்தவார் கரிய கூந்தற் கௌசலை மணந்த திண்தோள்
 சத்துவ குணத்தான் மிக்க தசரதன் ஈன்ற செம்மல்.       6
 |       இவ்வளவு துன்பத்திற்குக் காரணம் என்னை என வினாவுஞ்செல்வ    முத்தமிழ் முனிவரர் செவி ஏற்றருளுமாறு மிக்க கரிய நீண்ட கூந்தலை
 யுடைய கௌசலா தேவியை மணந்த திண்ணிய தோள்வலி அமைந்த
 சத்துவ குணத்தினால் மிக்க தசரதன் பயந்த குரிசில் நிகழ்ந்தது கூறத்
 தொடங்கினான்.
 கலிநிலைத் துறை	 		| எம்பி ரான் இது கேட்டருள் ஏழிரண் டாண்டு வெம்பு காட்டகத் துறைதிநீ இவனிலந் தாங்கி
 நும்பி யாகிய பரதனே வாழ்கென நுவன்று
 கம்பி யாதெனை எந்தைஇக் கானிடை விடுத்தான்.    7
 |       ‘எமது பெருமானே இதனைக் கேட்டருள்க பதினான்குவருடங்கள்    வெப்பம் சூழ்ந்த காட்டிடை வாழுதி நீ; பரந்த பூமி பாரத்தைத் தாங்கி
 உனது தம்பியாகிய பரதனே நாட்டிடை வாழ்க’ எனக்கூறி மனம் நடுக்கங்
 கொள்ளாமல் எந்தையேஎன்னை இக்கொடியகாட்டிடை விடுத்தனன்.’
 |