மலைய மாதவன் கேட்டுநின் மனத்துறும் விழைவு கலைம திக்கழுஞ் சிறுவனோ டொக்கும்அக் கதிர்ப்பூண் முலைம டந்தையை இராவணன் கவர்ந்துபோ முறைமை இலைகொள் வேலினாய் எவர்உனக் கியம்பினர் என்றான். 16 | பொதியமலைப் பெருந்தவக் குறுமுனிவரர் கேட்டு ‘நின்மனத்தில் எழும் விருப்பம் கலை நிரம்பிய திங்களைப் பெற விரும்பி யழும் குழவியை ஒக்கும் ஒளி வீசும் பூண்களை அணிந்த கொங்கையையுடைய சீதையை இராவணன் வலிதிற்கொண்டு போம் இயல்பினை இலைபோலும் வடிவினையுடைய வேலவனே! யாவர் உனக்குக் கூறினர்’ என வினவினர். ‘விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்று’ (திருக்கோ.) சடாயு என்றுயர் கழுகிறை சானகி பொருட்டு விடாது போர்உழந் திறப்பவன் விளம்பிடத் தெளிந்தேன் கடாது கொண்டவட் பெறுந்திறம் அருளெனக் கரையும் வடாது வெற்புறழ் புயத்தனை மாமுனி நோக்கி. 17 | ‘சடாயு’ என்னும் பெயருடன் உயர்ந்த கழுகரசு சானகியை விடுதலை செய்தற் பொருட்டு முடியுமளவும் விடாது போர்செய்து வருந்தி இறக்கும் நிலையில் அவன் விளம்பிடத் தெளிய உணர்ந்தேன். கையிகவாமற் கொண்டு அவளைப் பெறும்வகை அருள்செய் யெனப் பேசும் வடக்கின் கண்ணுள்ள மேருமலையொடு மாறுபடுகின்ற தோள்களையுடைய ஸ்ரீராமனைப் பெருந்தவர் பார்த்து, அவட் பெறும்; இரண்டாம் வேற்றுமைத் தொகை; உயர்திணைக் கண் ஒழிந்து வந்தது புறனடையாற் கொள்க. நின்க ருத்திது வேல்உயர் நெடுவரை குழைத்து வன்கண் மாற்றலர் புரம்பொடி படுத்தவன் மலர்த்தாள் புன்கண் நீங்குமா றடைக்கலம் புகுமதி அவனே உன்க ருத்தினை முடித்திட வல்லன்என் றுணராய் 18 | ‘உன் நினைவு இவ்வாறாயின், உயர்ந்த மேருவை வில்லாக வளைத்துத் தறுகண்மையை யுடைய பகைவர்தம் முப்புரங்களை நீறுபடுத்தினோன் றன் மலரை ஒக்கும் திருவடிகளைத் துன்பம் நீங்குமாறு அடைக்கலம் புகுமதி. அப்பெருமானே உன் நினைவை முற்றுப்பெறச் செய்ய வல்லவன்’ என்றுணர்வாயாக. அவனே வல்லன்: ‘இராவணன் (ஐ) திருவடி விரலின், ஒன்றனால் இறக்கண்டனன் (20-ஆம் செய்யுள்) ஆதலின் என்க. உலகம் யாவையும் ஒருநொடிப் பொழுதினில் அழிப்போன் நிலையும் வில்லினன் கொடுங்கொலைப் பகழியன் நிகரா அலகில் ஆற்றலன் உருத்திரன் ஒருவனே யன்றி இலையெ னப்புகன் றோலிடும் இயம்பருஞ் சுருதி. 19 | |