| 		| அங்கண் முப்புரம் அட்ட பிரான்தளி எங்கும் உள்ளன நோக்கி இறைஞ்சிஅத்
 துங்க வைப்பினில் தொக்க முனிவரர்
 தங்கள் சேவடி தாழ்ந்து வினாவுவான்.            4
 |       அக்கரையில் திரிபுரத்தை அழித்த பெருமான் வீற்றிருக்கும்     திருக்கோயில்கள் எங்கும் உள்ளவற்றைக் கண்டு தொழுது அவ்வுயர்ந்த
 தலத்திற்குழீஇ யிருந்த முனிவரர்களைத் தொழுது வினாவுவான்.
 		| ஈசன் வைகும் இடங்கள் எவைஎவை ஆசின் றோங்கும் அவற்றுளும் மேலதாந்
 தேசின் மிக்க திருநகர் யாவது
 பேசு கென்ன முனிவரர் பேசுவார்.                5
 |       சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் எவ்வெவை குற்றமின்றி     உயர்வுறும். அத்தலங்களின் மேலதாய் அருள் விளக்கம் மிக்க திருக்கோயில்
 யாது? அதனைக் கூறுக என்று வேண்ட முனிவரர் கூறுவார்.
      நகர்-திருக்கோயில்; ‘‘முக்கட் செல்வர் நகர்’’ (புற. 6:18.)	 		| பருவ ரைத்தோட் பரதன் வருடமே கரும பூமி எனப்படுங் காண்அது
 மருவும் எவ்வுல கத்தினும் மாண்டதாம்
 திரும லர்ப்பனந் தேந்தொடை மார்பனே.          6
 |       அழகின் பொலிவும் தேனும் மருவிய பனம்பூ மாலையை யணிந்த    மார்பினனே! பருத்த மலையை ஒக்கும் தோள்களையுடைய  படை-பரதன்
 ஆட்சி செய்தமையால் பெயரிய பரத கண்டமே கரும பூமி எனப்பெறும்
 அறிதி. அக்கண்டம் எவ்வுலகத்தினும் மாட்சிமையுடையதாகும்.
      பலம்-கலப்பையின் கொழு. பத்திரம்-படை.	 		| கரும பூமி வரைப்பிற் கடவுளர் மருவி டங்கள் சிறந்தன மாட்சியோய்
 அருள்வி ளைக்கும் அவற்றினும் மேலவாம்
 தரும சக்கர பாணி தலங்களே.                   7
 |       மாண்பின் மிக்கோனே! கரும பூமியாகிய பரதகண்டத்தில் தேவர்    கோட்டங்கள் சிறந்தன. அருள் சுரக்கும் அவற்றினும் மேன்மைய ஆகும்
 அற வடிவாகிய சக்கரத்தைத் திருக்கையில் ஏந்திய திருமால் தலங்களே.
 		| அவற்றின் மிக்கன மானிடர் ஆக்கிய சிவத்த லங்கள் கடவுளர் செய்தன
 அவற்றின் மேலன வாகுஞ் சுயம்புவாம்
 சிவத்த லங்கள் அவற்றிற் சிறந்தன.              8
 |  |