அவற்றினும், மக்கள் வகுத்த சிவபிரான் திருக்கோயில்கள் மிக்கன. தேவர்கள் வழிபாடியற்றிய சிவாலயங்கள் முன்னவற்றினும் சிறப்பின. தானே தோன்றிய சிவலிங்கப்பிரான் கோயில் கொண்ட நகர்கள் தேவர் நியமித்த இடங்களிலும் சிறப்புடையன. சுயம்பு வைகுந் தலங்களுள் மிக்கவாம் வியந்தெ டுத்து விளம்பப் படும்அவை நயந்த அங்கவற் றுள்ளும்நற் காசிமிக் குயர்ந்த தன்னதிற் காஞ்சி உயர்ந்ததே. 9 | தான் தோன்றீசப் பெருமான் தலங்களினும் மேம்படுவன ஆகும் வியந்து எடுத்தோதப் படுவனவாகிய ஏழு நகரங்கள். விரும்பிய அத்தலங்களுள்ளும் நற்காசி மிக்குயர்ந்த நகரமாகும். அத்தலத்தினும் காஞ்சியே உயர்ந்தது. ஏழு நகர்: அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன. ஓது காஞ்சிக் குயர்ந்ததும் ஒப்பதும் பூத லத்திடை இல்லை புகலும்அம் மாத லத்தின் உகத்தின் வருத்தமும் பாத கப்பய னும்பட ராவரோ. 10 | போற்றப் பெறும் காஞ்சி மாநகர்க்கு உயர்ந்ததும், ஒப்பதும் ஆகிய தலம் புவியிடை இல்லை. பேசப்பெறும் அப்பெருந் தலத்தின்கண் வாழ்பவர்க்குக் கால வேறுபாடுகளினால் வரும் துன்பங்களும், பெரும்பாவப் பயன்களாகிய நரக முதலிய துன்பங்களும் வந்து வருத்தமாட்டா. அரோ, தேற்றப் பொருளது, பிறந்து ளோர்கள் வதியப் பெறுநர்அங் கிறந்து ளோர்உளத் தெண்ணுநர் யாவரும் அறந்த ழைக்கும்ஏ கம்பர் அருளினாற் சிறந்த முத்தி உறுவது தேற்றமே. 11 | ‘திருக்காஞ்சியில் பிறக்கும் பேற்றினையுடையவரும், அங்குறையும் வாழ்வுடையோரும், இறப்போரும், அத்தலத்தினை உள்ளத்தில் நினைப்பவரும், ஆகியோர் யாவரும் அறத்தைத் தழைக்கச் செய்யும் ஏகம்பர் திருவருளினாற் றலையாய முத்தியை எய்துவது சத்தியமே? மேற்படி வேறு என்றறி வுறுத்திய இயல்பின் மாதவர் மன்றலம் பூங்கழல் வணங்கி யாதவன் அன்றவர் ஏவலிற் காஞ்சி அண்மிஅங் கொன்றிய வளனெலாம் உவந்து நோக்கினான். 12 | |