|      வேண்டும் வரங்களைக் கூறுக என்றருள மேற்கொண்ட பெரு     மகிழ்ச்சியின் மெய்ம்முழுதும் மயிர்க்கூச்செறிந்த பலராமர்ஆண்டகையே!
 திருக்கூத் திடையறாது புரியும் நின்திருவடிகளில் ஏழையேனுக்கு ஒரு
 காலத்தும் நீங்காத பேரன்பினை நல்குவாய்.
 		| இச்சிவ லிங்கத்தின் இமய மாதொடு நிச்சலும் இனிதமர்ந் தருளி நின்னடி
 நச்சினோர்க் கிருமையும் நல்கு வாய்என
 அச்செயல் முழுவதும் அருளி நீங்கினான்.       17
 |       ‘யான் வழிபாடியற்றிய இச்சிவலிங்கத்தின்கண் உமையம்மையாரொடும் நாடோறும் இனிது வீற்றிருந்தருளி நின்திருவடியை விரும்பினோர்க்குப்
 போக மோட்சங்களை அருளுவாய்’ என யாவும் அருள்செய்து மறைந்தனர்.
 		| காருடைப் பளிக்குருக் கலப்பை வான்படைத் தாருடைப் போந்தினான் தாபித் தேத்திய
 சீருடை இலிங்கத்தைத் தெரிசித் தோரெலாம்
 ஏருடைக் கைலையில் இனிது வாழ்வரால்.       	18
 |       காரினையேந்திய உழுபடையினையும், பளிங்கு நிறத்தினையும், பனம் பூமாலையினையும் உடைய பலராமன் தாபித்துத் துதித்த சிறப்புடைய
 சிவலிங்கத்தைத் தெரிசித்தோர்யாவரும் திருக்கைலையில் இனிது வாழ்வர்.
      இருளைப் போழுகின்ற பளிங்கெனினுமாம். போந்தின் தாருடையவன்     என விகுதி பிரித்துக் கூட்டுக.
 பலபத்திர ராமேசப் படலம் முற்றிற்று.	     ஆகத் திருவிருத்தம் - 1105	     வன்மீக நாதப் படலம்	 கலிநிலைத் துறை	 		| தேன்தாழ் பொலம்பூங் கடுக்கைச் செழுந்தார் விரைக்கின்ற தோள் வான்தாழ் மிடற்றண்ணல் வைகுற்ற பலபத்தி ரஞ்சொற்றனம்
 மீன்தாழ் தடஞ்சூழ் அதன்பச்சி மத்திக்கின் விண்ணாட்டவர்
 கோன்தாழ் நிலைபெற்ற வுன்மீக நாதத்தின் இயல்கூறுவாம்.     1
 |  |