| வயிரவேசப் படலம்	 கலி விருத்தம்	 		| வயிர வாளினான் வணங்கி வெந்துயர் வயிரம் மாற்றும்வன் மீகம் ஓதினாம்
 வயிர மாடமற் றதற்குத் தென்திசை
 வயிர வேச்சர மரபி யம்புவாம்.                  1
 |       வச்சிராயுத னாகிய இந்திரன் வணங்கிக் கொடுந் துன்பமாகிய     வன்மையைப் போக்கும் வன்மீகநாத வரலாற்றைக் கூறினோம். அதற்குத்
 தெற்கில் வைரங்கள் பதிக்கப்பெற்ற மாளிகைகள் சூழ்ந்த வயிரவேச்சர
 வழக்காற்றினைக் கூறுவோம்.
 பிரமன் செருக்கு	 		| வடவ ரைத்தலை முஞ்ச மானெனுந் தடநெ டுங்கிரி தன்னி டைச்சிலர்
 படிம உண்டியர் பாங்கின் நோற்றுழி
 அடல்அ னப்பிரான் அருளின் எய்தினான்.        2
 |       மேருமலையின் சிகரத்தில் முஞ்சமான் என்னும் பரந்த உயர்ந்த    மலையிடை விரதத்தான் உண்டி சுருக்கியோர்சிலர் நல்லியல்பில் தவஞ்
 செய்கையில் வலிமை அமைந்த அன்ன ஊர்தியோனாகிய பிரமன்
 அருளினால் அவர் முன் எய்தினான்.
 		| வதனம் ஐந்தொடும் வந்து தோன்றினான் பதம லர்த்துணை பணிந்தி றைஞ்சினார்
 துதிமு ழக்கினாற் சூழ்ந்து கைதொழூஉக்
 கதம்அ றுத்தவர் இதுக டாயினார்.              3
 |       ஐந்து முகத்தொடும் அங்கு வந்து தோன்றின பிரமனின் திருவடி மலர்     இரண்டனையும் பணிந்தனர்; தோத்திர ஒலியுடன் வலம் வந்து கையால்
 தொழுது கோபத்தை நீக்கினவர் இதனை வினாயினர்.
      கதம் கூறவே காமமும், மயக்கமும், நீக்கினவர் என்க.	 		| ‘‘இலகும் இச்சகம் யார்மு தற்று? மன் உலகெ வன்புடை உயிர்த்தொ டுங்கிடும்?
 பலப சுக்களின் பாசம் நீத்தருள்
 தலைவன் யார்? இது சாற்று’’ கென்றனர்.         4
 |  |