352காஞ்சிப் புராணம்


     வருபடை வேகக் காற்றினின் முரிய விரைந்துசெல் வயிரவப்
புத்தேள், திருமலர்க் குரிசில் பழித்திடும் அஞ்சாஞ் சிரத்தினை
யுகிரினாற் கொய்தான், பெருவிறல் உயிர்போய் விழுந்தபின் மீளப்
பிஞ்ஞகன் அருளினால் உய்ந்து, மருள்வலி நீங்கி எழுந்தனன்
மறையோன் வள்ளலை வணங்கிநின் றேத்தும்.                19

     வருகின்ற பிரமாஸ்திரம் தமது எதிர்செலவின் காற்றினால் முரியும்
படி விரைந்து போன வயிரவக் கடவுள் பிரமனது சிவநிந்தனை செய்ஐந்தாந்
தலையை நகத்தினாற் கொய்தனர். பெருவலியினனாகிய பிரமன் உயிர் நீங்கிக்
கீழ் வீழ்ந்த பின்னே இறையவன் திருவருளினால் உயிர் பெற்று மயக்கத்தின்
வலிமை நீங்கி எழுந்தனன். பிரமன் வள்ளலை வணங்கி நின்று துதிப்பான்: 

நான்முகன் முறையிட்டு வரம்பெறல்

     விளைநறை உகுக்குங் கமலமென் பொகுட்டு மேவரும்
எனைஎடுத் தாண்ட, களைகணே ஆவித் துணைவனே சருமக்
கலிங்கனே பிரமனே இருகால், வளைதரு பினாக பாணியே உனக்கு
நெய்அவி மடுத்துநல் ஓமம், உளைவறப் புரிகேம் உலப்பறும்
வாழ்நாள் உதவிமற் றெந்தமைக் காக்க.                      20

     விளைகின்ற தேனைச் சிந்தும் தாமரை மலர்ப் பொகுட்டில் மேவும்
எனை எடுத்தாண்ட பற்றுக்கோடே! உயிர்க்குத் துணைவனே! தோலை
உடையாக உடையவனே! பிரமனே! இருகடையும் வளைகின்ற பினாக
பாணியே! உனக்கு நெய்யும் அவியும் இட்டு நல்வேள்வியை மகிழ்ச்சியுடன்
செய்வேம் கெடாத வாழ்நாள் உதவி எம்மைக் காக்க!

     சருமம், புலி, சிங்கம், இவற்றின் தோல், பெரியோனே என்பான்
பிரமனே என்றனன். இனி, பிரமபதமும் அவனுடைமை ஆகலின் பிரமனே
என்றனன். பினாகம்-பினாகம் என்னும் வில், பாணி-கை.

     கரைபொரு திரங்கி வெண்டிரை சுருட்டுங் கருங்கடல்
புடைஉடுத் தகன்ற, தரையொடு விசும்பின் நள்ளிடைப் போந்த
தழல்நிறச் சுடர்எறி காந்திக், குரைபுனல் மோலிக் குழகனே தறுகண்
கொடுஞ்சினக் கடுந்தொழிற் பகட்டு, விரைசெலற் கூற்றின் அடுதிறற்
பாச மிடலறத் துணிந்தெமைக் காக்க.                        21

     கரையை மோதி ஒலித்து வெள்ளிய அலை மறித்து வீசும் கரிய கடல்
மருங்குடுத்தகன்ற பூமியுடன் விசும்பின் நடுவிட மெல்லாம் விரிந்து வந்
தொலிக்கின்ற கங்கையை எரிநிறத்தின் ஒளிவிடுகின்ற காந்தியையுடைய
சடையிடை அமைத்த அடிகளே! வன்கண்மையும், கொடிய சினமும்,
கொடுஞ்செயலும் கடா வாகனமும் உடைய இயம பயம் நீக்கி எம்மைக் காக்க.

     ஆயிரமா முகத்தினோடு இடமெல்லாங் கொள்ளாத தகைமையதாய்
வந்த ‘நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தான்.