வயிரவேசப் படலம் 353


     உலகெலாம் விரியும் ஆதிகா லத்தின் ஒருவனே
யாகிநின்றுள்ளாய், பலதிறப் புவன நாயகர் தம்மைப் பாற்படப்
பயந்தளித் தருள்வாய், மலர்தலை உலகம் மீளவந் தொடுங்க
மன்னிவீற்றிருந்தருள் முதலே, அலகிலா அருளான் நெய்அவி
மிசைந்தீண்டாயுளை அளித்தெமைக் காக்க.                  22

     எல்லா வுலகங்களும் தோன்று முதற் காலத்தில் ஒருவனாய் நின்று
உள்ளவனே! பல திறப்பட்ட புவனங்களுக்கு நாயகர்களை வெவ்வேறு படப்
படைத் தளித்தருள் செய்வோனே! விரிந்த உலகம் மீண்டும் குவிந்து
ஒடுங்குமாறு தான் ஒடுங்காது மன்னி விற்றிருந்தருள் முதல்வனே! இவண்
எல்லையில்லாத திருவருளால் அவிப்பாகத்தை ஏற்றாயுளைத் தந்தெம்மைக்
காத்தருள்க.

     சிறுவிதி மகவாய் முன்வரும் பிராட்டி அம்பிகை சீர்
இலக்குமிகோ, மறுவறும் அகில காரணி மலையான் மகளெனப்
பெயரிய தலைவி, நறுமலர்க் கடுக்கைத் தொடையல்எம் பெருமான்
நலங்கெழு சத்தியே வினைமா, சறுமுறை இருதாள் வழிபடுகின்றேம்
ஆயுளை அளித்தெமைக் காக்க.                           23

     தக்கனுக்கு மகளாய் முன் அவதரித்த பெருமாட்டியும், அம்பிகையும்,
சிறப்புடைய இலக்குமியும், பூமிதேவியும், குற்றத்தை அறுக்கும் உலகங்கட்குக்
காரணியும், மலையரையன் மகளும் எனப் பெயர்களைத் தாங்கிய
தலைவியாகிய நறுமணங்கமழும் கொன்றை மலர்மாலையைச் சூடிய எமது
பெருமானுக்குரிய நலம் பொருந்திய சத்தியே!  வினைக்குற்றம் அறும்படி
இரு திருவடிகளை வணங்குகின்றோம். ஆயுளை அளித்து எம்மைக்
காத்தருள்க.

     அகிலம்ஈன் றெடுத்த இருமுது குரவீர் அடியிணை போற்றிஎன்
றேத்து, நகுமலர்ப் பதுமத் தவிசினோன் துதிக்கு நயந்துளங்
கருணைகூர்ந் தருளி, முகிழ்முலை ஒருபால் மணந்துவீற் றிருந்து
முரண்கெடக் கூற்றுயிர் குடித்த, பகைஅடு கணிச்சி ஆதியம் பகவன்
பிரமனைப் பார்த்திது பகரும்.                            24

     எல்லா வுலகங்களையும் பயந்து காத்து வளர்க்கும் தாய் தந்தை தமீர்
திருவடிகளுக்கு வணக்கம் என்று துதிக்கும் விளங்குகின்ற தாமரை
மலரிருக்கையோன் துதிக்கு விரும்பி உளமுவந்து கருணை பூத்தருளி
அரும்பிய கொங்கையுடை அம்மையை ஒருபுடை இருத்திவீற்றிருந்து
கூற்றுவனது வலிமை கெட அவனுயிரை வாங்கிய பகையைத் தெறுகின்ற
மழுப்படையுடைய ஆதியம் பகவன் பிரமனை நோக்கி இதனைக் கூறும்.